@ அன்பு நெஞ்சகளே! எனது எண்ணங்களை கவிதையாக, சிறுகதையாக , கட்டுரையாக வண்ணம் தீட்டித் தருகிறேன். படித்து ரசித்து விமர்சிக்கவும். *நன்றி*
Friday, January 1, 2016
Tuesday, December 22, 2015
# கந்தகக்கவி பாண்டூவின் நூல்கள் வெளியீட்டு விழா#
#நூல்கள் வெளியீட்டு விழா#
28.11.2015 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ,
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் வைத்து கந்தகக்கவி பாண்டூவின் 'எட்டுக்காலியும் இருகாலியும்' மற்றும் 'டுவிட்டூ' ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டது. நிகழ்வை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட த.க.இ. பெருமன்றச் செயலாளர் தோழர் மணிமுடி அவர்கள் முன்னிலை வகித்தார். 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலைத் தமிழ்த் திரைப்பாக்கூடத்தின் நிறுவனர் மற்றும் பாடலாசிரியர் பிரியன் அவர்கள் வெளியிட, பேராசான் ஜீவாவின் பேரன் திரு.சுரேஷ் ஜீவா பெற்றுக் கொண்டார். 'டுவிட்டூ' நூலைப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் வெளியிட, இயக்குனர் திருப்பூர் ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், முத்தமிழ்க்கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன், ஊடகவியலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத்தின் கவிஞர் நா.சுப்புலட்சுமி, யுவபாரதி கந்தகப்பூக்கள், நவீன் k.குருசாமி, ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். த.க.இ. பெ விருதுநகர் கிளைச் செயலாளர் நீலநிலா செண்பகராசன் வரவேற்க, ராசா கண்ணன் நன்றியுரை வழங்க, கவிஞர் சுகா தொகுத்து வழங்கினர். த.க.இ. பெருமன்ற பாடகர்கள் மதிவானன் மற்றும் கீர்த்தி நூலில் உள்ள பாடல்களைப் பாடினர். நூலாசிரியர், த.க.இ. பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் கந்தகக்கவி பாண்டூவின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவுற்றது.
- கந்தகக்கவி பாண்டூ,
- விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்,
- த.க.இ. பெருமன்றம்,
-6 ஜவுளிக் கடை வீதி,
- சிவகாசி - 626123.
- செல் : 8807955508.

Tuesday, October 6, 2015
நிலையாமை
No man ever steps in the same river twice, for it's not the same river and he's not the same man.
Heraclitus
நிலையாமை என்பது நிதர்சனமானது தவிர்க்க முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தமே மாற்றத்திற்கு உட்பட்டது. இதைத் தான் மேலே உள்ள வரிகள் வெளிப்படுத்துகிறது. இதையே மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் புத்தர். இதையே சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தில் வெளிபடுத்தினார் மார்க்ஸ். எனவே என்றுமே மாறாத நிலையான பொருள், என்ற ஒன்று (அதாவது ஆத்மா) இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது என்கிறார் புத்தர். மாற்றத்தின் வேகத்தை கூட்டலாம் குறைக்கலாமே தவிர, அதை தவிர்க்க முடியாது. இது தான் அவரது அனாத்மா வாதம். ஆத்மா என்ற ஒன்று இல்லை என்றால், பேராத்மாவாகிய கடவுளும் இல்லை என்கிறார். நிலையாமை என்பதை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை விடுத்து நாம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் எனும் பேராசையில் ஆத்மா, ஒளி உடல் அதற்கான வழிமுறை என செல்வது, போகாது ஊருக்கு வழியே ஆகும். இந்த ஆசையைத் தான், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.
- பாண்டூ, சிவகாசி .

Tuesday, July 15, 2014
மின்னல் வெளிச்சமிடும் கபிலர் வரலாறு
நூல்
குறிப்பு
பெயர் : கவிதை
வடிவில்
கபிலர் வரலாறு
கபிலர் வரலாறு
வகை : கவிதை
பதிப்பகம் : ஜான்சிராணி
பதிப்பகம்,
தேனி
தேனி
ஆசிரியர் : த.கருணைச்சாமி
செல் : 9486736639
விலை : ரூ.25/-
தேனி ஜான்சிராணி பதிப்பகத்தின் வெளியீடாக, ஜனவரி 2013 ஆம் ஆண்டு, கவிஞர் த.கருணைச்சாமி
அவர்கள் எழுதிய ‘கவிதை வடிவில் கபிலர் வரலாறு’ மலர்ந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க
மரபு பாடல்களால், கபிலர் குறித்த செய்திகளை, துணுக்குகளை மற்றும் அவரது வரலாற்றைத்
தாங்கி வந்துள்ளது. இந்த அவசர உலகில் இலக்கியத்தை இளைப்பாறுதலுக்கான நோக்கத்தோடோ, சிந்தனை
ஏற்றத்துக்கான நோக்கத்தோடோ படைக்காமல், கபிலர் மீதான தன் தீராக் காதலால், அவர் குறித்தான
ஒரு வரலாற்றுப் பதிவாய் எளிமையாய், இரத்தினச் சுருக்கமாய்த் தன் படைப்பைப் படைத்துள்ளார்
கவிஞர்.
ஆம்! இந்த அவசர உலகத்திற்க்கு ஏற்ப, இந்நூல் 56 பக்கமே கொண்ட சிறுநூலாக வெளிவந்துள்ளது.
கபிலர் குறித்த ஒரு சிறு கையேடாக இதை அனைவரும்
வைத்துக்கொள்ளும் சிறப்புடைத்து. ஒரு பக்கம் படங்களும், மறுபக்கம் பாடல்களுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கபிலரின் படம் ஒன்று கூட இல்லாதது வருத்தமே.
இந்நூலை இலக்கிய அந்தஸ்த்து பெறாத ஒரு பதிவாக மட்டுமே நாம் காணமுடியும். கவிதை வடிவில்
என பெயரிடாமல், பாடல் வடிவில் என பெயரிடல் சாலப்பொருத்தமாய் அமையும். பாடலுக்கும்,
கவிதைக்குமான வேறுபாடு நுண்ணியது. ‘காலை எழுந்தான், காபி குடித்தான்/ மாலை வந்தான்
மயங்கி விழுந்தான்’ என்று அன்றாட நிகழ்வைக்கூட பாடலில் வடித்திட முடியும். அன்றே, கட்டிட
சாஸ்திரம், மருத்துவ அறிவியல் என அனைத்தும் மரபுப்பாடலில் இயற்றப்பட்டுள்ளது. அதை நாம்
செய்யுள் என்கிறோம்.
கவிதை என்றால், கதை ஓட்டமும், கற்பனை வளமும் கைகோர்த்து வாசகன் உணர்வலைகளை மீட்டுதல்
வேண்டும். அதற்கான களம், கபிலர் மற்றும் பாரியின் நட்பில் மிகுந்திருந்தும், ஆசிரியர்
அவ்வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். எனினும், மரபுப்பாடலுக்கே உண்டான, எதுகை மோனை நயம்,
பாராட்டத்தக்கது. மேலும், ஆசிரியர் மரபுகளில் உள்ள இயைபுத்தொடை, உவமை மற்றும் சந்தத்திற்கு
அழுத்தம் கொடுக்க வேண்டும். கபிலர், பாரியைத் தவிர வேறு யாரையும் பாடா மரபுடையவர்.
இதுவே, மூவேந்தர்களையும் முற்றுகை இடவைத்தது. பாரி மாண்டதன் பின்னர், பாரி மகளிரான
அங்கவை சங்கவை இருவருக்கும், அதரவு தரும் படி பிற மன்னர்களிடம் கையேந்திய போதும், அவர்கள்
ஆதரவு தராததன் பின்னணியும் அதுவே. இது எல்லாம் கவித்துவமான இடங்கள். கபிலரின் வரலாற்றில்
உள்ள இத்தகைய நட்பு மற்றும் கையறு நிலையின் உணர்வுகளை வெளிக் கொணர்ந்திருந்தாலோ இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும்.
கபிலர் பாடிய மலைகள், ஊர்கள், மலர்கள் (99வகைப் பூக்களைக் கபிலர் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது);
அவருக்குக் கிடைத்த புகழுரைகள், பரிசுகள்; மற்றும் பாரிக்கும் கபிலருக்குமான நட்பு
என இத்தொகுப்பு கபிலர் பற்றி செய்திகளை சுவை குன்றாமல், அலுப்புத்தட்டாமல், வரும் இளைய
தலைமுறைக்கு கடத்திச் செல்கிறது. இவ்வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.
‘இயற்கையை நேசிப்போரை எனக்கு என்றுமே பிடிக்கும். அதனாற்றான் கபிலரை தேர்ந்தெடுத்துக்
கவிதை யாத்தேன்.’ என்று தனது நூலுக்கான நோக்கத்தைத் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்
ஆசிரியர். தற்போது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கல் என்ற
மூவேந்தர்கள், பாரியின் இயற்கை வளமிக்க பறம்பு மலையை முற்றுகை இட்டதுபோல், வளம்மிக்க
நம் தேசத்தை முற்றுகை இட்டுள்ளனர். இயற்கை ஆர்வலர் அனைவரும் ஒன்று கூடுவோம், மூவேந்தர்களின்
சதியை முறியடிப்போம். அதற்கு இந்நூல் வழிவகுக்கும். அப்படியான ஒரு வரலாற்றை நாம் நினைவுகூறும்
விதமாக இந்நூல் பரிணமிக்கிறது.
மொத்தத்தில் வரலாற்றைத் திரும்பிப்பார்ப்பதன் மூலமாக, மனித குலத்தின் எதிர்காலச் சிக்கல்களைச்
சுட்டி, அதை விடுவிப்பதற்கான உந்துதல்களையும் மின்னல் வெளிச்சமிட்டுப் பயணிக்கிறது இத்தொகுப்பு. மேலும், கவிஞர் த.கருணைச்சாமி
அவர்கள் பற்பல மரபுக்கவிதையின் கூறுகளையும்,
வடிவங்களையும், யுத்திகளையும் தேர்ந்து வளர
வாழ்த்துகள்.
மதிக்கணலி,
சிவகாசி.
சிவகாசி.
Saturday, April 26, 2014
ஓட்டுப் போடுவது நம் கடமையா!?
ஜனநாயகம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு விடை தெரியாமலேயே... ஒவ்வொரு தேர்தலிலும்
ஓட்டுப் போட்டு, ஒவ்வொருவரும் தம் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாக பூரிப்படைகிறார்கள்.
ஓட்டுப் போடாதவர்களை ஒரு குற்றவாளியைப் போல், ஒரு தேசத் துரோகியைப் போல் அருவருப்பாகவும்
பார்க்கிறார்கள். முதலாமவர்கள் தம் சூழலை எப்படியாவது மாற்றிவிடலாம், அது நம் கையில்தான்
இருக்கிறது என்ற ஆர்வத்தில் மாற்றி மாற்றி வாக்களிப்பவர்கள். இரண்டாமவர்கள், முதலாமவர்களைப்
போலவே மாறி மாறி வாக்களித்தும், தம் வாழ்வில் ஒரு மாற்றமும், ஏற்றமும் வராததை உணர்ந்தவர்கள்.
‘ஓட்டுப் போடுவது நம் கடமை’, என்ற வாசகம் முக்கிற்கு முக்கு முழங்கப்படுகிறது,
ஏடுகளில் பக்கத்திற்குப் பக்கம் பரப்பப்படுகிறது. ஏதோ, மக்கள் வாக்களிக்காததால் தற்போதைய அரசியல்வாதிகள் திருடுகின்றார்கள். மக்கள் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை முறையாக நிறைவேற்றினாலே, தானாக இந்த அமைப்பு சீராகிவிடும் என்று என்.ஜி.ஓக்களும், நடிகர்களும், அரைகுறை அரசியல் அறிவாளிகளும், திருடுவதற்கென்றே கட்சி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்வதை நம்பி, மக்கள் வாக்குசாவடிக்கு போகின்றார்கள்.
இங்கே ‘கடமை’ என்பதை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கு நிலவும், ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக இயங்கும் இந்த நடைமுறைகளால் மக்களின் மனசாட்சி உறுத்தலுக்குள்ளாகிறதோ; இந்த நடைமுறையில் மக்களுக்கு எப்போதெல்லாம் ஐயம் எழும்புகிறதோ; அப்போதெல்லாம் அவன் இந்த நடைமுறைக்கு ஒத்துழைக்காமல் போய்விடாதவாறு, அவனுக்கு விருப்பு இல்லாத, உடன்படாத, ஏன் முற்றிலும் எதிரான விடயங்களைச் செய்ய ‘கடமை’ என்ற வார்த்தை காலங்காலமாகப் பிரயோகிக்கப்படுகிறது.
இதை நாம் மகாபாரதத்தில் காணலாம். விஜயன், தன் உடன் பிறந்தவர்களைக் கொல்வதற்குத் தயங்கி நின்றபோது, தன் குருமார்களுக்கு எதிராக அம்பு தொடுக்க விருப்பு இல்லாத போது, மண்ணுக்காக தம் சுற்றத்தாரை அழிக்கவா எனும் ஐயம் வந்த போது, அவனுக்கு கிருஷ்ணரால் போதிக்கப்பட்டது தான் “‘அவனவன் குலக்‘கடமை’யைச் செய் பலனை எதிர்பாராதே”. அது தான் கீதோபதேசம். இத்தகைய கடமையால், அவனுக்கு எந்த விதமான பயனும் இல்லை என்பதை அறிந்தே தான்... கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என பொட்டில் அடித்தாற்போல் முதலிலேயே சொல்லிவைத்துவிடுகிறார்கள்.

‘கடமை’ என்பது எப்போதும், குறைவான எண்ணிக்கையிலுள்ள ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தினரின்
நலனுக்காக, பெருவாரியான மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். கிருஷ்ண பரமாத்மா(!?) தொடர்கிறார்
:- “நான் தான் இந்த உலகத்தில் மக்களுக்கு தர்மத்தை உண்டு பண்ணியிருக்கிறேன். எல்லாரும்
ஒழுங்காக வாழ ஒரு வ்யவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறேன். நான் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டிகர்த்தா
மட்டுமன்றி இந்த என் படைப்பில் எப்படி வாழவேண்டுமென்ற ஞானத்தையும் அளித்திருக்கிறேன்.
குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான்கு வர்ணத்தை(ஜாதியை)ப் படைத்திருக்கிறேன்.”
-அத்யாயம் 18 ஸ்லோகங்கள் 41,42,43,44
இவ்வாறு நான்கு ஜாதியை உண்டாக்கி, அரசன் மகன் அரசனாவதை, கேள்வி எழுப்பாமல் ஏற்றுக்கொள்ளவும்,
யார் அரசாண்டாலும் பிராமணன் வழிவழியாக உண்டு கொழுப்பதைச் சகித்துக்கொள்ளவும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கடமையை வலியுறுத்துகிறது
கீதை.
அன்று மன்னர் ஆட்சி முறை, இன்று குடியாட்சி முறை. அன்று மன்னர்கள், இன்று மந்திரிகள்.
அன்று மன்னராவதற்கு படை பலம், இன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு பணபலம். பணத்தை வாரி இறைப்பது
பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும். இதற்குப் பல்லக்கு தூக்குபவர்கள் அதிகாரிகள்.
இதில் பேணப்படுவது பெருமுதலாளிகள் மற்றும்
பன்னாட்டு நிறுவனத்தாரின் நலம் மட்டுமே. இங்கு ஓட்டுப்போடுவது வேண்டுமானால், பணக்காரனும்-ஏழையும், முதலாளியும்-தொழிலாளியுமாக
இருக்கலாம். ஆனால் வெல்வது, பணக்காரர்களும், முதலாளிகளுமே. அரசு எந்திரம் எளியோர்கானதாக
இல்லை.
இப்பேர்பட்டச் சூழலில் ஓட்டுப்போடுவது நம் கடமை அல்ல, நம் மடமை. நம் நாட்டைப்
பெருமுதலாளிகளும், பன்னாட்டு நிறுவனத்தாரும் சுரண்டிக்கொள்ள நாமிடும் கையொப்பம். இந்த உண்மையைப் புரிந்தவர்கள், ஓட்டுப் போடமாட்டார்கள். ஓட்டால், பழைய திருடனை
ஓட்டிவிட்டு, புதிய திருடனுக்கு வாய்ப்பளிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல்வாதிகளுக்கு
பாடம் புகட்டுவதாய் நினைத்துக்கொண்டு வாக்களிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலும் நம் போன்ற
வாக்காளர்களுக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? தேவை வெறும் வேட்பாளரில் மாற்றம் மட்டுமல்ல,
கொள்கையில் மாற்றம், முதலாளித்துவத்திற்கு அனுகூலமான இந்த ஜனநாயகத்தில் மாற்றம். மறுபடியும்
வலியுறுத்துகிறேன், ஜனநாயகம் என்றால் என்ன? விடையைத் தேடுங்கள்.
“ஓட்டுப் போடுவது நம் கடமை என்றால்...
ஓட்டுப் போடாதது நம் உரிமை!”
நமக்குப் பயனளிக்காத எதையும் தூக்கி எறியத் தயாராகுங்கள்.
ஆனாலும் 70% வாக்குப் பதிவு என்பது, மக்கள் தேர்தல் அரசியலில் தீவிரமாக பங்கெடுப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தானாகவே இந்த அமைப்பு முறையால் ஏமாற்றப்பட்டு, மாற்று வழியை நாடுவதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கின்றது.
-பாண்டூ,
-சிவகாசி
-9843610020
Saturday, April 5, 2014
ஒரே குட்டையில்...
பாசி படிந்த குளத்தில்
வேர்பாவியபடி
பாசாங்காய்ப் புன்னகைக்கிறது
தாமரை!
சேற்றின் நாற்றம்
தொட்டுவிடாதபடி
நம் நாசியில் மட்டும்
வாசனை வீசி
ஒளிர்கிறது!?
இலையுடன்...
ஒட்டியும் ஒட்டாமலும்(!?)
உறவாடுகிறது!
சுல்லெனும் சூரியனோ
சுட்டெரிக்காமல்...
நட்பாய்தான் காய்கிறது!
இதோ!
பாசியில் வழுக்கி
சேற்றில் விழுந்தவற்றின்
சகதி அறிக்கை!
தான் ஆடுவதற்கு
சகதியின் மினுமினுப்பை
வழுவழு தரையென
நம்பி ஏமாந்து
ஆக்கர் வாங்கியபடி...
சாட்டையில்லா பம்பரம் ஒன்று!
தன் அழுகலைச்
சேற்றில்
கழுவிக் கழுவி
மூழ்கி எ(வி)ழுந்தபடி...
சாதி வண்டு துளைத்த
மாம்பழம் ஒன்று!
வெற்றி முரசம் ஒன்று...
ஓங்கி முழங்கி
பராக் வாசித்தபடி!
இன்னுமும் நீளுகிறது
MH-370 விமானத்தின் தேடுதலாய்...
சேற்றில் விழுந்திட்ட
இத்தியாதி இத்தியாதிகளை!
ஒரு கை பார்த்துவிடுவதாய்
பம்மாத்து காட்டியபடி
தாமரையின் கரசேவைக்கு
உதவிக்கரம் நீட்டும்
‘கை’!
எல்லாம்... எல்லாம்...
பாசி(சம்) படிந்த
ஒரே குட்டையில்... !!
- பாண்டூ,
- த.க.இ.பெருமன்றம்,
- 6 ஜவுளிக்கடை வீதி,
- சிவகாசி - 626123.
- 9843610020
Subscribe to:
Posts (Atom)