Thursday, March 3, 2016

குஜராத்தில் கவியலை

10.1.16 இன்று குஜராத், அகமதாபாத் நகரில் காலை 10 மணியளவில் "Poetrusic" அமைப்பின் கவிதை குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. இவ்வமைப்பின் நிறுவனர் திருமதி.நெஹா அவர்களின் அறிமுக உரையோடு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் உருது மொழியிலிருந்து ஒரு கஜல், ஆங்கில மொழியில் ஒரு Sonnet, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி கவிதைகள் வாசித்து விவாதிக்கப்பட்டன. பாண்டூவாகிய நானும் நிகழ்வின் பங்கு கொண்டேன். அதில் தமிழில் எனது 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' என்கிற கவிதையை வாசித்து ஹிந்தியில் விளக்கம் கொடுத்தேன். மேலும், தோழர் நீல நிலா செண்பகராசனின் 'தீஸ்ரி காண்ட்' என்கிற ஹிந்தி நூலிலிருந்து ஹைக்கூக்கள் வாசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 பேர் கலந்து கொண்டனர். தொல்பொருள் ஆய்வாளர் திரு.அனுப் தேவ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்தும் ஐந்திணை பாகுபாடு குறித்துச் செல்லுமாரு ஆவலுடன் கேட்டுக் கொண்டார். என்னைத் தவிர அனைவரும்
குஜராத்தியர்கள் மற்றும் மராட்டியர்களே.அவர்களின் தமிழ் ஆர்வமும் கவி ஆர்வமும் வியப்பில் ஆழ்த்தியது. நமது நூலையும் ஹிந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என அவாவை கொடுத்தது. மகிழ்ச்சி.
 
 

ஆகச் சிறந்த என் படைப்பு

இயற்கை எழிலும்
இயல் தமிழும்
இவள் உரு கொண்டதுவோ?
மகவென வந்ததுவோ

?

எனது நூல் விமர்சனம்

இன்றைய 29.11.2015
சென்னை, தின இதழ்👆 செய்தித்தாளில், எனது 'எட்டுக்காலியும் இரு காலியும்' கவிதைத் தொகுப்பின் நூல் விமர்சனம் வந்துள்ளது. நண்பர்களே வாங்கிப் படியுங்கள்.



கந்தகக்கவி பாண்டூவின் நூல்கள் வெளியீட்டு விழா

#நூல்கள் வெளியீட்டு விழா#

28.11.2015  சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ,
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் வைத்து கந்தகக்கவி பாண்டூவின் 'எட்டுக்காலியும் இருகாலியும்' மற்றும் 'டுவிட்டூ' ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டது. நிகழ்வை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட த.க.இ. பெருமன்றச் செயலாளர் தோழர் மணிமுடி அவர்கள் முன்னிலை வகித்தார். 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலைத் தமிழ்த் திரைப்பாக்கூடத்தின் நிறுவனர் மற்றும்  பாடலாசிரியர் பிரியன் அவர்கள் வெளியிட, பேராசான் ஜீவாவின் பேரன் திரு.சுரேஷ் ஜீவா பெற்றுக் கொண்டார். 'டுவிட்டூ' நூலைப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் வெளியிட, இயக்குனர் திருப்பூர் ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், முத்தமிழ்க்கவிஞர்  ஆலந்தூர் கோ.மோகனரங்கன், ஊடகவியலாளர் ச.பிரின்சு  என்னாரெசு பெரியார்,  திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத்தின் கவிஞர் நா.சுப்புலட்சுமி, யுவபாரதி கந்தகப்பூக்கள், நவீன் k.குருசாமி, ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். த.க.இ. பெ விருதுநகர் கிளைச் செயலாளர் நீலநிலா செண்பகராசன் வரவேற்க, ராசா கண்ணன் நன்றியுரை வழங்க, கவிஞர் சுகா தொகுத்து வழங்கினர். த.க.இ. பெருமன்ற பாடகர்கள் மதிவானன் மற்றும் கீர்த்தி நூலில் உள்ள பாடல்களைப் பாடினர். நூலாசிரியர், த.க.இ. பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்  கந்தகக்கவி பாண்டூவின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவுற்றது.

- கந்தகக்கவி பாண்டூ,
- விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்,
- த.க.இ. பெருமன்றம்,
-6 ஜவுளிக் கடை வீதி,
- சிவகாசி - 626123.
- செல் : 8807955508.







முனைவர் பொ.நா.கமலா அவர்களின் நூல் வெளியீடு

      20.11.15 திருநெல்வேலியில் நடந்த, காவ்யாவின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழாவின் போது...
அதில் முனைவர் பொ.நா. கமலா அவர்களின் நூல் வெளியிடப்பட்டது.

 நூல் ஆசிரியர்களை வாழ்த்துவோம்.



 
 
 

சென்ட்ரியு

-------------

கறை
நல்லது
சோப்பு வியாபாரிக்கு!?
                   - பாண்டூ.

ஹைக்கூ

-----------------

யார் யாரோ ஏற்றிய சுமை
கழுதையாய்
நான்!!
              - பாண்டூ.