Sunday, June 9, 2013

சாவிகளும் பூட்டுகளும்




பூட்டுகள்...
பூட்டியே வைக்கப்படுகின்றன!

காக்கும் பொறுப்பைச் சுமத்தி
கட்டியே வைக்கப்படுகின்றன!

சாவிகளின் உத்தரவிற்கே
வாய்த் திறக்க அனுமதிக்கப்படுகின்றன!

வாசலோடும் மூலையிலுமாய்
ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு
செருப்பென ம(மி)திக்கப்படுகின்றன!

ஏனோ?
சாவியின் காதுகளுக்குள்
அவைகளின் ஈனக்குரல்
நுழைவதேயில்லை!

இ(அ)ற்றுப்போன சாவிக்காய்
உடன்கட்டையும் ஏற்றப்படுகின்றன!

சாவிகளை நம்பியே
காலம் தள்ளக்
கட்டாயப் படுத்தப்படுகின்றன!

சாவிகளின் தவறுகளுக்காய்
எப்போதும் தண்டிக்கப்படுகின்றன...
பூட்டுக்கள் மட்டுமே!!

                                                                           -         பாண்டூ
                                                                           -         சிவகாசி
                                                                           -         9843610020

(09/06/2013 அன்று, கந்தகப்பூக்கள் இலக்கியப் படைப்பரங்கில் வாசிக்கப்ப்ட்ட கவிதை)