ஐந்தாண்டுக்கு ஒரு ஆட்சி மாற்றம் என்பது பெருங்கனவாய்ப் பொய்க்கும்!
நம்மை ஆள
ஹெலிக்காப்டரும் வாட்ஸ் 'ஆப்பு'ம் போதுமென நி௹பணமாகும்!
வனவாசம் போனால் என்ன?
சிறைவாசம் ஆனால் என்ன?
கொடவாசம் சென்றால் என்ன?
பாதுகைகளின் ஆளுகை
பழங்கதை அல்ல
நமக்கின்றும்
தொடர்கதையாய் நீளு...ம்!
நமது ஆள்காட்டி விரல்
நவீன துரோணர்களிடம்
இன்னுமொரு ஐந்தாண்டு
அடகுக்கு போகும்!
ஊடகத்தின்
நாரதக் கலகங்கள்
என்றும்
அதிகார வர்க்கத்தின்
நன்மையில் முடியும்!
இன்னுமொருமுறை
தேர்தல் என்பது
ஜனநாயகம் அல்ல
வெறும் சடங்கெனத் தெரியும்!
இன்னுமொருமுறை
ஓட்டுகளால் மாற்றம் நிகழாதென உண்மை புரியும்!
இன்னுமொருமுறை
மக்கள் மறதியே
வெல்லும்!!
- பாண்டூ, சிவகாசி.