Monday, March 11, 2013

9.3.2013 அன்று காலை 4 மணியளவில் இயற்கை எய்திய எழுத்தாளர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் மறைவுக்கு கவிதாஞ்சலி

உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?

இன்னமும் நீ .................
கதைகளூடே கதைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
கவிதைகளூடே உறவாடிக் கொண்டுதான் இருக்கிறாய்
       
இசையுனூடே அசைத்துக் கொண்டுதான் இருக்கிறாய்
நாவல்களூடே நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறாய்
      
தத்துவங்களூடே தர்க்கம்செய்து கொண்டுதான் இருக்கிறாய்
வார்த்தைகளூடே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்

வார்த்தைகள் வாழவைக்குமாம்
நீயோ, வார்த்தைகளாகவே வாழ்கிறாய்...

இன்னமும் உன்...
மூச்சில்தான் நாங்கள்
 உயிர்த்திருக்கிறோம்!          

உனக்கு இரங்கற்பா எழுதுவதாய் இல்லை !
இறந்தவர்க்குதானே இரங்கற்பா!?
                                                                               -    பாண்டூ, சிவகாசி


Friday, March 8, 2013

எழுத்தாளர் ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் மறைவு

கவிஞர்  செ.ஞானன்
6/1291 ஞானக்குயில் இல்லம்
ஆசாரி காலனி
சிவகாசி மேற்கு.
செல் : 9943334766

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்


எல்லாம்
கழித்தல் குறியாகிப்போன தேசத்தில்....
பூஜ்ஜியங்கள்
பூஜிக்கப்படுகின்றன !

ஒன்றை பத்தாக்குவதோ
ஒன்றுமில்லாமல் ஆக்குவதோ....
பூஜ்ஜியங்களே தீர்மானிக்கின்றன !

பூஜ்ஜியத்தின் ஆளுமையின் கீழ்
ஒன்றானாலும் ஒன்பதானலும்
அணிவகுத்து நிற்கின்றன !

அணிவகுத்து நிற்கும் எதனோடு
ஆலிங்கணம் செய்து
பூஜ்ஜியங்கள்....
பூஜ்ஜியங்களை மட்டுமே
பெருக்கிக் கொள்கின்றன!

கூட்டலும் பெருக்கலுமே....
வாழ்வாகிப்போனதால்
வகுத்தல் வஞ்சிக்கப்பட்டு
சமன்பாடுகள்
தகர்க்கப்படுகின்றன !

வகுத்தலுக்கும் வகுபடாது ....
கழித்தலிலும் கழிவுறாது....
தொன்றுதொட்டுத் தொடர்கிறது

பூஜ்ஜியங்களின்
சாம்ராஜ்ஜியம் !!


                                     -        பாண்டூ, சிவகாசி
                                            செல்: 9843610020



சுயகுறிப்பு


பெயர்                       :  பாண்டூ , சிவகாசி
செல்லிடபேசி                :    98436 10020
கல்வி                       :   இளநிலை பொறியியல் (EEE)
பிறந்த தேதி          :     16 - 12 - 1976

தற்போதைய பொறுப்பு :
            கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின் துணைச் செயலாளர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.

கவிதைகள் வெளியானவை :
1. தமிழ்த்தாய் வாழ்த்து : கந்தகப்பூக்கள் சிறப்பிதழ் செப்டம்பர் 2005
2. வானவில் காயங்கள் : தினமலர் - வாரமலர் 20 நவம்பர் 2005
3. தாய் மண்ணே வணக்கம் : என்லைட்டர் ஜூன் 2006
4. மெல்லத் தமிழினி வாழும் : திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை, கருங்குழி, 23, ஜூலை 2006
5, காலம் : கோடை பண்பலையில் கதவைத் தட்டும் கற்பனைகள் பகுதியில் 24 மார்ச் 2007 அன்று வாசிக்கப்பட்டது
6, கந்தகப்பூக்கள், நீலநிலா, ஏழைதாசன், பயணம், வளரி, கதவு, இன்று மலர், உண்மை, ஜனசக்தி மற்றும் தாமரை ஆகிய சிற்றிதழ்களில் பல கவிதைகள்


வெளியான நூல் : வெள்ளை இரவு (2007) [கவிதைத் தொகுப்பு]

கவிதைகளை வெளியிட்டுள்ள இணையதளங்கள் :
www.vaarppu.com
www.orukavithai.com
www.malaigal.com
www.unmaionline.com