Saturday, April 5, 2014

ஒரே குட்டையில்...

பாசி படிந்த குளத்தில்
வேர்பாவியபடி
பாசாங்காய்ப் புன்னகைக்கிறது
தாமரை!

சேற்றின் நாற்றம்
தொட்டுவிடாதபடி
நம் நாசியில் மட்டும்
வாசனை வீசி
ஒளிர்கிறது!?

இலையுடன்...
ஒட்டியும் ஒட்டாமலும்(!?)
உறவாடுகிறது!

சுல்லெனும் சூரியனோ
சுட்டெரிக்காமல்...
நட்பாய்தான் காய்கிறது!

இதோ!
பாசியில் வழுக்கி
சேற்றில் விழுந்தவற்றின்
சகதி அறிக்கை!

தான் ஆடுவதற்கு
சகதியின் மினுமினுப்பை
வழுவழு தரையென
நம்பி ஏமாந்து
ஆக்கர் வாங்கியபடி...
சாட்டையில்லா பம்பரம் ஒன்று!

தன் அழுகலைச்
சேற்றில்
கழுவிக் கழுவி
மூழ்கி எ(வி)ழுந்தபடி...
சாதி வண்டு துளைத்த
மாம்பழம் ஒன்று!

வெற்றி முரசம் ஒன்று...
ஓங்கி முழங்கி
பராக் வாசித்தபடி!

இன்னுமும் நீளுகிறது
MH-370 விமானத்தின் தேடுதலாய்...
சேற்றில் விழுந்திட்ட
இத்தியாதி இத்தியாதிகளை!

ஒரு கை பார்த்துவிடுவதாய்
பம்மாத்து காட்டியபடி
தாமரையின் கரசேவைக்கு
உதவிக்கரம் நீட்டும்
‘கை’!

எல்லாம்... எல்லாம்...
பாசி(சம்) படிந்த
ஒரே குட்டையில்... !!

-    பாண்டூ,
-    த.க.இ.பெருமன்றம்,
-    6 ஜவுளிக்கடை வீதி,
-    சிவகாசி - 626123.
-    9843610020

3 comments:

  1. மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதைத் தவிர்த்து வேறொரு வழியையும் இந்த முதலாளித்துவ ஐனநாயகம் காட்டுவதே இல்லை. பாசிசம்னா என்ன என்று தெரியாத மக்கள் மந்தைக்கு எதிரியையும் தெரியவில்லை ஆயுதம் எது என்பதும் புரியவில்லை.

    ReplyDelete
  2. ஆட்டோ பைலட் வசதி இருப்பதால் தூங்கிவிடும் விமானிகள் போல (அதுதான்யா விபத்து ஆகுது) நம் மக்களுக்கு அம்னீசியா இருப்பதால் விழித்துக் கொள்வதே இல்லை.

    ReplyDelete
  3. ஒருத்தரையும் விடவில்லை...

    ReplyDelete