Tuesday, December 22, 2015

# கந்தகக்கவி பாண்டூவின் நூல்கள் வெளியீட்டு விழா#

#நூல்கள் வெளியீட்டு விழா#

28.11.2015  சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ,
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் வைத்து கந்தகக்கவி பாண்டூவின் 'எட்டுக்காலியும் இருகாலியும்' மற்றும் 'டுவிட்டூ' ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டது. நிகழ்வை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட த.க.இ. பெருமன்றச் செயலாளர் தோழர் மணிமுடி அவர்கள் முன்னிலை வகித்தார். 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலைத் தமிழ்த் திரைப்பாக்கூடத்தின் நிறுவனர் மற்றும்  பாடலாசிரியர் பிரியன் அவர்கள் வெளியிட, பேராசான் ஜீவாவின் பேரன் திரு.சுரேஷ் ஜீவா பெற்றுக் கொண்டார். 'டுவிட்டூ' நூலைப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் வெளியிட, இயக்குனர் திருப்பூர் ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், முத்தமிழ்க்கவிஞர்  ஆலந்தூர் கோ.மோகனரங்கன், ஊடகவியலாளர் ச.பிரின்சு  என்னாரெசு பெரியார்,  திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத்தின் கவிஞர் நா.சுப்புலட்சுமி, யுவபாரதி கந்தகப்பூக்கள், நவீன் k.குருசாமி, ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். த.க.இ. பெ விருதுநகர் கிளைச் செயலாளர் நீலநிலா செண்பகராசன் வரவேற்க, ராசா கண்ணன் நன்றியுரை வழங்க, கவிஞர் சுகா தொகுத்து வழங்கினர். த.க.இ. பெருமன்ற பாடகர்கள் மதிவானன் மற்றும் கீர்த்தி நூலில் உள்ள பாடல்களைப் பாடினர். நூலாசிரியர், த.க.இ. பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்  கந்தகக்கவி பாண்டூவின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவுற்றது.

- கந்தகக்கவி பாண்டூ,
- விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்,
- த.க.இ. பெருமன்றம்,
-6 ஜவுளிக் கடை வீதி,
- சிவகாசி - 626123.
- செல் : 8807955508.













No comments:

Post a Comment