கந்தகக் கவி பாண்டு எழுதிய -எட்டுக்காலியும் , இரு காலியும் :
கவிதைத்தொகுப்பு
------------ ------------
நூல் அறிமுகம்- செந்தில் பாலாஜி- பொள்ளாச்சி
==== ========== =============== =============
"நகை , அழுகை கோபம் , வெகுளி என உணர்வுகள் நிறைந்த வாழ்வு இது . ஆம் , அழகான உணர்வுகள் அழகான வாழ்வியலை தரும் . ஆழமான உணர்வுகள் அழகான வாழ்வியலை உருவாக்கும்.
பழந் தமிழர்களின் ஆழமான உணர்வுகளில் முத்தமிழான இயல் , இசை நாடகம் மூன்றும் உதிரம் கலந்து இருந்தது. ஆதித் தமிழர்கள் ஆயக்கலைகள் "64" லும் தேர்ச்சி பெற்றோரும் உண்டு, இயற்கையே கடவுளென எண்ணி அந்த இயற்கைக்கு நிகரான பரதக் கலை கற்காமல் நின்ற ராஜ சேகர பாண்டிய மன்னனும் உண்டு.
இயற்கையும் , தமிழர்களும் பிணைந்து வாழ்ந்த காலங்கள் மருவி நின்று தற்சமயம் , செண்டை மேளமும் , நவீன இசை கருவிகளுக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தையும் "பறை இசை" அழிந்து வரும் நவீன கால சூழலை முதல் கவிதையில் கூறுகிறார், கந்தக கவி பாண்டு .
இன்று சென்னையின் முக்கிய பகுதியான "Parrys Corner" ஆதி காலத்தில் "பறையர் முக்கு " என்று அழைக்கப்பட்டதே ஆகும். அதாவது பறை இசை தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதி.
தொகுப்பின் தலைப்பு சற்று வித்யாசமாய் , கவிதைகளை படிக்கும் போது மட்டுமே உணர முடிந்தது தலைப்பின் தனி சிறப்பை.
பூமியினில் , எத்தனையோ விச ஜந்துக்கள் இருக்க, தன் சுய உழைப்பினால் சுவற்றின் ஒரு மூலையில் தான் கட்டிய கூட்டை களைந்து விஷமச் சிரிப்புகளை பார்க்கும் ஒரு எட்டுக்கால் சிலந்தி பூச்சிக்கும் - ஒடுக்கப்பட்டவர்கள் என ஓரம் கட்டி, சமூகத்தில் சீர்குலைக்கப்பட்டு , விஷமச் சிரிப்புகளை வேடிக்கை பார்க்கும் அப்பாவி இரு கால் மனிதனுக்கும் , தனது கவிதைகளில் நிறையவே போராடி இருக்கிறார், கவிஞர் .
மனிதன் மனித வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட மிருகம் என்பதனை , வன விலங்குகள் மனிதன் மனிதனா என்பதை விவாதிப்பது போன்ற கவிதையின் முடியில் " மனிதன் மனிதனென" வாதம் தோற்பது சமூகத்தின் பிம்பங்கள்.
ஜாதி வெறி பிடித்த சமூகத்தில் - மண்ணுக்குள் இன்னும் மக்காமல் இருக்கும் நேற்று கொல்லப்பட்ட சங்கரின் சதைமூட்டையும், நேற்று முன் தினங்களில் கொல்லப்பட்ட கோகுல் ராஜ் மற்றும் இளவரசன் ஆகியோரின் சதைமூட்டைகளும் வேடர்கள் உண்பதற்காக இன்னும் மக்காமல் மண்ணுக்குள் இருக்கிறது என்னும் செய்தியை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பெண்களின் அடிமை நிலை மாற நிறைய சாவிகளை கொடுத்துள்ளார்.
நாயிடம் கடி வாங்கிய பைத்தியங்களும் , பைத்தியங்களிடம் கல் அடி வாங்கிய நாயும் பேசி கொள்வது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது.
இரவை எதிர்த்துப் போராடிய வெண்ணிலாவிற்கு மகுடம் சூட்ட நினைப்பது நியாயம்.
காதலை பல கோணங்களில் எழுதி தீர்த்துவிட்ட கவிதைகளுள் ,
" வந்து வந்து
வம்பிழுக்கும்
அண்ணனின் அடாவடியும்
காதல் ....
ஏட்டிக்கு போட்டியாய்
தம்பி அடம்பிடிப்பதும்
காதல் ....
நம்மீது அடி விழ
தங்கை அழுவதும்
காதல் ....
யாதும் ஊரே .
யாவரும் கேளிர் என
பற்றி படர்ந்து
விரியும் மனிதமே
காதலென ...!
சீர் திருத்துகிறார்.
இன்னும் ஏன், கரணம் போட்டும், கயிறு நடை போட்டும் , கண்ணாடி பாட்டில் களை வயிறு வரை விட்டு வித்தை செய்து பிழைக்கும் வித்தை காரர்கள் மத்தியில் வாகனத்தை வேகமாய் ஒட்டி நீ ஏன் வித்தை செய்கிறாய் என்று ஒரு கவிதையில் கேட்கிறார்.
அக்கா மகளும் அத்தை மகளும் இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் துணை என்பது புன்னகை .
எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளும் , ஈழத்தின் மண் வாசமும் புலிக்கொடியும் - வீரம் .
குழைந்தைகள் திட்ட வேண்டாம் என்று சொல்லி , குழைந்தைகள் செய்யும் குறும்புத்தனம் மற்றும் கேளிக்கைகளுக்கு தக்க நேர்மறை எண்ணங்களை பெற்றோர்களுக்கு சொல்லி கொடுத்து வருங்கால இந்தியாவை வல்லரசு ஆக்க முயற்சி எடுத்திருக்கிறார்.
சரித்திர தேர்ச்சி கொண்டு , சரித்திரத்தில் இடம் பிடி என்கிற ஊக்குவிப்பில் , எனது கண்மயிர்களுக்குள் ரத்தம் பாய்கின்றது.
கவிதை தொகுப்பை படித்து முடித்தவுடன் , அதற்குள் முடிந்து விட்டதா என்கிற ஏக்கம் தொற்றிக்கொள்ள .,
ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் , வீட்டிற்கும், நாட்டிற்க்கும், உலகிற்கும் , இந்த படைப்பு உயித்தலுக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தலை சிறந்த படைப்புக்கு ஏன் விருதுகள் கொடுத்து கௌரவிக்க கூடாது என்பது எனது ஆசை.
மகிழ்ச்சியுடன்
செந்தில்பாலாஜி
9976563769
https://www.facebook.com/pollachitms
நன்றி: தமுஎகச பொள்ளாச்சி

No comments:
Post a Comment