இத்தகு சூழலில் அரசு தொலைக்காட்சியான, டிடி பொதிகைத் தொலைக்காட்சி, இலக்கியத்திற்காக கனிசமாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிவருவது மகழ்ச்சி அளிக்கிறது. அதில் ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியும் ஒன்று. இதனை முன்னர் பேராசிரியர் ரமணன் அய்யா நெறிப்படுத்தினார். தற்போது பாடலாசிரியர் பிறைசூடன் அவர்கள் அதனை நெறிப்படுத்துகிறார்.
பிறைசூடன், இந்நிகழ்வை அருமையாக கொண்டு செல்கிறார். எளிமையும், விசய ஞானமும் ஒருங்கே அமைந்தவராக காட்சியளிக்கிறார். பழம்பெரும் கவிஞர்கள் மட்டுமல்லாது, ஆரம்ப கட்ட எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது இந்நிகழ்வை மேலும் கவனிக்க வைக்கிறது.
இந்நிகழ்வில் பங்குகொள்ள சமிபத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. 21.01.2014 அன்று ‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’ நிகழ்ச்சியின் படமாக்களில் நானும் ஒரு விருந்தினாராய் பங்குபெற்றேன். அதில் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களும் பங்கேற்றார். பாடலாசிரியர் பிறைசூடன் மற்றும் கவிஞர் அ.வெண்ணிலா அவர்களை அப்போது தான் முதல் முறையாக சந்தித்தேன். அ.வெண்ணிலாவின் கணவர் மு.முருகேசனைப் பற்றி கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி வாயிலாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்று தான் அவரையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல மனிதர். அவரும் ஒரு எழுத்தாளர். நிறைய கவிதை மற்றும் ஹைக்கூ தொகுப்பு எழுதியிருக்கிறார். மேலும் அகநி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.
பாடலாசிரியர் பிறைசூடனை நாம் அறிந்ததே. கவிஞர் வெண்ணிலா அவர்களின் சமீபத்திய படைப்பான ‘துரோகத்தின் நிழல்’ எனும் கவிதைத் தொகுப்பு ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ நட்த்திய பரிசுப் போட்டியில் 2013ஆம் ஆண்டிற்கான சிறந்தநூல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சியின் படமாக்கல் முடிந்ததும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ வில் 700க்கு மேற்பட்ட புத்தக விற்பனையகங்களைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. மைதானத்தில் திரு. காசி அனந்தன் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அங்கு வள்ளலார் பதிப்பகத்தாரின் தமிழ்த்தேசிய நாட்காட்டி (விலை. ரூ.100) ஒன்றை வாங்கிவிட்டு, முதலில் நண்பர் முகேசனின் அகநி பதிப்பக விற்பனையகத்திற்கு சென்றேன் (கடை எண். 277). பிறகு ஒவ்வொரு அரங்கமாக பார்த்து மாலை 6 மனியளவில் வெளியேறினேன்.

‘கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்’ நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மதியம் 1.30 க்கு டிடி பொதிகையில் ஒளிபரப்பாகிறது. நான் கலந்துகொண்ட நிகழ்வு 16.02.2014 ஒளிபர்ப்பாக உள்ளது. தவறாது பாருங்கள். தங்கள் கருத்தைத் தாருங்கள். நன்றி.
பாண்டூ, சிவகாசி.
pandukavi16@gmail.com
www.pandukavi16.blogspot.in
9843610020