குறுந்தொகை : பாடல் 12.
.....................................................
பாடியவர்: ஓதலாந்தையார்.
இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (12, 21, 329) ஐங்குறுநூற்றில் பாலைத்திணைக்குரிய 100 பாடல்களும் இயற்றியவர்.
பாடல் :
................
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
.......................................................
உரை:
............
இப்பாடல் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிரான பெண்ணின் குரலாகப் பார்க்கிறேன். நன்னீரூற்று(சுனைய) சுரக்கும் எனது எறும்பின் வளை போன்ற சிறிய அல்குலுடைய என்னை விடுத்து, உலையில் ஏற்றி வைக்கப்பட்ட கொதிக்கின்ற கலனைப்(பாத்திரம்) போல் உள்ள கடும் பாறை ஒத்த பரத்தையர்களை நாடிச் சென்று, கொடுரமான வில்லை உடைய எய்னர்கள் தம் அம்புகளை அழித்துக் கொள்வது போல் (பிறவற்றை மாய்க்கும் தன்மையுடைய அம்பு, வீணாய்ப் பாறையில் மோதி தன்னையே மாய்த்துக் கொள்வது போல்) அவ்வம்பொத்தத் தன் ஆண்குறி அழித்துக் கொள்ளும் அவனைப் பற்றி அவலங்கொள்ளாது (தூற்றாது) , என் மீது கடுஞ்சொல் வீசும் இங்கீதமற்ற முட்டாள் ஊரே.
- பாபதி.

No comments:
Post a Comment