நீடு துயில் நீக்க
செ.ஞானன்
பாடி வந்த நிலா
தோற்றம் : 15.04.1942
ஓய்வு கொண்டது மறைவு : 09.03.2013
உறஞ்கச் சென்றது
எழுத்தாளர் செ.ஞானன் (எ) ஞான பாண்டியன் நம்மிடையே இப்போது இல்லை. அவர் வாழ்ந்து
வந்த சிவகாசியில் 9.03.2013, சனிக்கிழமை அன்று தன் வாழ்வின் இறுதி நாளை நிறைவு செய்து
கொண்டார்.
செ.ஞானன் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவராவார். திருநெல்வேலி மாவட்டத்தில்
வேலன்குளத்தில் 1942ல் பிறந்த செ.ஞானன் அஞ்சல் நிலைய உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
2002ல் ஓய்வு பெற்றார். முற்போக்கு இலக்கியவாதிகளோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
கவிதைகள், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம், சிறுகதை, நாவல், தத்துவம், வாழ்க்கை
வரலாறு, கட்டுரை, நாடகம், என அனேக தளங்களில் 28 நூல்கள் படைத்துள்ளார். தமிழ்நாடு கலை,
இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
அவர் பங்கேற்று நடத்திய அமைப்புகள் சில. கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சுடர்
இலக்கியப் பேரவை, வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, பாரதி இலக்கியச் சங்கம், லில்லி தேவசிகாமணி
அறக்கட்டளை, நீலநிலா இதழ் குழுமம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
எழுத்தாளர் தனுஷ் கோடி ராமசாமி அறக்கட்டளை, அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், களம் இதழ்
அமைப்பு, கொடி இதழ் அமைப்பு, கதவு இதழ் அமைப்பு, இத்துடன் விருதுநகர் மாவட்டக் கலைஞர்கள்
குழுவிற்கு கெளரவ ஆலோசராகவும் இருந்துள்ளார்.
அவருக்கு ஞானக்குயில் என்ற பட்டம் தந்து இலக்கிய அமைப்புகள் அவரைக் கெளரவப்படுத்தின.
நல்ல நண்பர், பண்பாளர், பழகுவதற்கு இனியவர், கோபமேபடாதவர், விருந்தோம்பல் குணம் உடையவர்.
நல்ல இசை ஞானம் உடையவர், சந்தத்தோடு தமிழ் பாடல்கள் இயற்றிப் பாட வல்லவர், மரபுக் கவிதைகள்
இயற்றுவதில் பலருக்கு ஆசான் அவரே.
இருதய நோயால் பலவீனமுற்றிருந்த ஞானன் மறைந்தாலும், நம் இருதயங்களில் நினைவு
கூறப்படுவார். நல்ல இலக்கியத்தை நேசிக்கும் எவரும் செ.ஞானன் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு
பெரும் இழப்பு என்றே கூறுவர்.
எஸ்.ரமேஷ் (வழக்கறிஞர்) செல் :
8754224076
53, கந்தாடைத் தெரு
ஸ்ரீவில்லிபுத்தூர் 626125
விருதுநகர் மாவட்டம்.
நன்றி : வாரமுரசு
, செய்தி இதழ்,(18-03-2013)
tp.
yp
No comments:
Post a Comment