(பாண்டூவின்
‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)
கை சேர்ந்தது
கவிதை !
2. கவியரங்கம் !
நீ பெயர் சொன்னாய் !
கைதட்டியது கவிதை
3. வரவேற்க ஆளில்லை !
வாசலோடு திரும்பும்
செருப்பு...
4. குடத்தின் காலி இடங்கள் !
நிரப்புமா
பாமர மேகங்கள் ?
5. உதிர்த்துச் செல்லும் காற்று !
கைகுலுக்கும் கிளை !
வாடும் உதிர்ந்த பூ
6. கோழி கூவும் நேரம் !
கூவிக்கூவி எழுப்பியது
கைபேசி !
7. குண்டு மழை !
எப்படி துளிர்க்கும்
போதி மரம் ?
8. பலூன் காரனின் மூச்சு !
பிடித்து விளையாடும்
பிள்ளைகள் !
9. அடுப்பங்கரையில் பூனை !
வாசலில் நாய் !
முதியோர் இல்லத்தில் தாத்தா
!
10. தாத்தா சொத்துப்
பேரனுக்காம்...
புன்னகைத்தது கைத்தடி !
No comments:
Post a Comment