Tuesday, October 22, 2013

ஹைக்கூ – 10 (தொகுதி – 2)


(பாண்டூவின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)



11.       கனவு சுமக்கும் விழி !
கணவாய்ப் போனது
பார்வையற்றோர்க்கு !!

12.      சிவன் கோவில் தெற்கு வாசல் !
இன்னும் மூடிக்கிடக்கிறது !
நந்தனை உள்வாங்கி !!

13.       சுதந்திரதின உரை
தொடங்கியது ...
பேசுவதை நிறுத்துங்கள் !

14.       சொல்லித்தர ஆளில்லை !
சொதப்புகிறது
முதற்காதல் !

15.   இணையமுடியவில்லை !
இறந்து போகிறோம் !
இப்படிக்கு நதிகள் !!

16.   ஓடுகிறது ...
அன்று ஆறு !
இன்று மணல் !!

17.      கையில் இனிப்பு
நெஞ்சில் ஊசி
சுதந்திரதினம்!?

18.   ‘காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்’
கேலியாய்ப் புன்னகைக்கும்
பகத்சிங்கின் தூக்குக்கயிறு !

19.   ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்குக் கேட்டு
வலம்வரும் ‘காந்தி’!

20.  சிணுங்கும் போதெல்லாம்
பேசி அணைத்துக் கொள்கிறேன்
கைப்பேசியை !

2 comments:

  1. தங்களின் தகவல் கண்டேன்... Followers ஆகி விட்டேன் தொடர்கிறேன்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் ஆலோசனைக்கு நன்றி தோழரே...

    ReplyDelete