Friday, March 25, 2016

****"""

நீ தூங்கச் சென்றதால் தானோ?
கருப்பு வெள்ளையானது...
வானம்!!
                       - பாண்டூ.

Tuesday, March 22, 2016

கயல் குட்டி


- பல்லவி -

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

வெள்ளை சிரிப்புல கொள்ளை அடிக்குற...
கொள்ளை அழகுல உள்ளம் பறிக்கிற...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

கதிர் ஒளியினைத் தட்டி எழுப்பிட...
கடல் அலையினை எத்தி உதைத்திட...
மணற் கரையினில் நண்டு பிடித்திட...
மன வெளியினில் இன்பம் பெருகிட...

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் -1 -

இருகை நீட்டி என்னை அழைத்தாய்...
நான் குழந்தையாக ஆசிர்வதித்தாய்!
மொத்த வானத்தை பார்வையில் மறைத்தாய்!
மழலை மொழியில்  மெல்லிசை வடித்தாய்!

உன்னை நான்தான் சுமந்தேனோ...
என்னை நீதான் சுமந்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

- சரணம் - 2 -

ஒரு கன்னம் காட்ட முத்தம் வைத்தால்...
மறு கன்னம் காட்டி ஏங்கி நிற்பேன்!
வீட்டுச் சுவற்றினில் பாடம் நடத்திநீ
என்னை அதட்ட நானும் ரசிப்பேன்!
உன்னை நான்தான் படைத்தேனோ...
என்னை நீதான் படைத்தாயோ...

அன்னை போலவே உந்தன் மனதினில்
என்னை சுமந்திடும்...
நீயே என்தாய்!
நீயே என்தாய்!

வா செல்ல கயல் குட்டி!
உன் பேர் குளிர் பனிக்கட்டி!

     - பாடலாசிரியர் பாண்டூ.

லிமரைக்கூ

கடன் தொல்லையா?
இனி ஆலோசனை சொல்ல...
இருக்கவே இருக்கார் விஜய் மல்லையா!
                                    - பாண்டூ.

Monday, March 21, 2016

******

கல்!
நாய்!
எது நீ?
எது நான்?
        - பாண்டூ.

உனைக் கண்ட நாள் முதல்


ஆண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடி!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடி!

தீட்டிவச்ச அருவா ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடி!
வெட்டபட்ட தலை ஒன்னு...
தண்ட வாளத்துல ஓடுதடி!

கடை வீதியில நடந்தாக்க...
தொடை ரெண்டும் நடுங்குதடி!
எவன்எப்ப குத்துவானோ...
என் உசுரு  துடிதுடிக்குதடி!

பெண் :
உன்ன கண்ட நாள் முதலா...
என் தூக்கம் கெட்டு போனதடா!
கெட்ட கெட்ட கனவு வந்து...
என்ன தட்டிதட்டி எழுப்புதடா!

ஆசீட்வச்ச முட்டை ஒன்னு...
கண்ணுல வந்து போகுதடா!
வெந்துபோன முகம் ஒன்ன...
கண்ணாடியும் காட்டுதடா!

பஸ்ஏறி பயணம் போனாக்க
உடலெல்லாம் உதறுதடா!
எவன் என்னை சிதைப்பானோ
என் உசுரெல்லாம் பதறுதடா!!
                                     - பாண்டூ.
                                  -9843610020.

Friday, March 18, 2016

பட்டிமன்றம்

இதயம் மீட்டும்
இசையைத் தருவது
வீணையா? பியானோவா?

பட்டிமன்றத்தில்
நடுவராய் நான்!

எனது தீர்ப்பு என்னவோ...
கைமீட்டும் அவைகளை விட
உன் கால் மீட்டும்
கொலுசுக்குத்தான் !!
                                - பாண்டூ.

Thursday, March 17, 2016

ஹைக்கூ

கனவுளை விதைத்து!
அறுவடை செய்யப்படுகிறது...
எங்கள் தூக்கம்!!
                                  -பாண்டூ.

Wednesday, March 16, 2016

பெண் தொழிலாளர்களுக்கான இருநாள் விழிப்புணர்வு முகாம்

"பெண் தொழிலாளர்களுக்கான இருநாள் விழிப்புணர்வு முகாம்"

நாள் : 15, 16 - மார்ச் - 2016

விருதுநகரில் வைத்து மத்திய தொழிலாளர் கல்வி வாரியம், மதுரை மண்டல  அலுவலகம் ஏற்பாடு செய்து நடத்தியது. நிகழ்வை கல்வி அதிகாரி திரு.ஜெ. செண்பகராஜன் தலைமை தாங்கினார். அதில் சிறப்பு விருந்தினர்களாக, சமூகப் பணியாளர்கள் திரு.இரா.இரமேஷ் பாண்டி (பாண்டூ), திரு.A.R.M.முத்து மற்றும் திரு.A.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து பயன் பெற்றனர். உயர்திரு. M.ரீட்டா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார். நன்றி.




Saturday, March 12, 2016

நூல் விமர்சனம் - எட்டுக்காலியும் இருகாலியும்

24.1.16  ஞாயிறு அன்று சென்னையில் 25ஆவது வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது(பாண்டூ) 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலின் விமர்சனம் இம்மாத கொலுசு மின்னிதழில் வெளியாகி உள்ளது. கொலுசு மின்னிதழுக்கும் அதன் ஆசிரிய குழுவிற்கும் மு.அறவொளி அய்யாவிற்கும் எனது நன்றிகள்🙏 விமர்சனம் படிக்க👇

kolusu.in/kolusu/kolusu_mar_16/mobile/index.html#p=57

Thursday, March 10, 2016

சென்ரியு வெற்றியாளர் பாண்டூ

10.03.2016 இன்றைய சென்ரியுகவி வெற்றியாளர் கவிஞர் பாண்டூ
#########################################################
அமைதிக் குழு
ஆயத்தமானது...
ஆயுதத்தோடு!?
              - பாண்டூ.

என் கவிதைக்கு இடம் அளித்த 'ஒரு கவிஞனின் கனவு' குழுமத்திற்கும், வெற்றியாளராய்த் தேர்த்தெடுத்த தேர்வு குழுவிற்கும் நன்றி.
******************************************

14.2.2016 இன்றைய சென்ட்ரியூ கவியின் வெற்றியாளர்
கவிஞர் பாண்டூ
==========================================================இன்றைய சென்ட்ரியூ கவியைத் தேர்ந்தெடுத்த
நண்பர் மகிழ்நன் மறைக்காடு அவர்களுக்கு நன்றிகள்
==========================================================

கலவியில்லாமல் கரு...
கருவாகாமல் கலவி...
வளர்கிறதா விஞ்ஞானம்!?
                               - பாண்டூ.


.

Wednesday, March 9, 2016

ஹைக்கூ

அமைதிக் குழு
ஆயத்தமானது
ஆயுதத்தோடு!?

           - பாண்டூ
          - 9843610020

அழகிய ஆடை

நிலா சோப்பு
நிதம் வெளுக்க...

சூரியப் பெட்டி
இஸ்திரி இட...

மடிப்புக் கலையாமல்
மிடுக்காய்
புவி தினம் அணியும்
அழகிய ஆடை...

அந்த வானம்!!

 - பாடலாசிரியர் பாண்டூ.
           - 9843610020.

Monday, March 7, 2016

மகளிர் தினப் பாடல்

மகளிர் தினப் பாடல்
-------------------------------------
            -08.03.2016-

('அல்லா உன் ஆணைப்படி' பாடல் மெட்டில் பெண் பாடுவது போல் எழுதியது)

பல்லவி :
பெண்ணே நம் ஆணைப்படி
எல்லாம் நடக்கும்!
ஓ.. எல்லாம் நடக்கும்!
தொல்லை இல்லாத வண்ணம்..
பெண்ணின் பிறப்பும்
ஓ.. மண்ணில் இருக்கும்!

உயர்பெண்மை போற்றி கொண்டாடிட..
திருநாளும் இன்று உண்டானது..
மண்ணில் சமமாய் ஆணும் பெண்ணும் வாழ..

சரணம் 1:
மாப்பிள்ளை கண்டு கல்யாணம் பேச..
சீர் கொடுக்கும் காலம் இன்றோடு போக!
பார்த்திடுவோம் ஆணிற் கீடான வேலை..
ஊதியமும் இனிஈடாகும் வேளை!

பெண்..
பணிந்து நடந்தால்
பூவுமிங்கு நாகம் ஆகத் துணியும்..
நாம்..
துணிந்து எழுந்தால்
வானம்நம் பாதம் வந்து பணியும்..

பெண்ணை ஆண்
ஆணை பெண்
போற்றும் போது மண்ணில்
மாற்றங்கள் உண்டாகுமே!

சரணம் 2 :
பூப்பறித்து வந்து பொன்னூஞ்சலாடும்,
பூவையினி அந்த விண்ணோடம் ஏவும்!
ஏற்றிடுவோம்   புதிதாய் ஒரு நீதி..
ஆண்களுக்கு வீட்டு அலுவல்கள் பாதி!

வா!
அவதாரம் அனைத்தும்
ஆணாய் ஆன
சூழ்ச்சி கண்டு பிடிப்போம்!

வா!
கைகள் கோர்ப்போம்
காலமிது  நல் சபதம்
தன்னை முடிப்போம்!

வெல்லுவோம்!
வெல்லுவோம்!
ஆணும்  பெண்ணும் சமம்
ஆகாமல் ஓயோமம்மா!!

                 - பாண்டூ,
                - 9843610020.

Friday, March 4, 2016

பாண்டூவின் சிறு சுய விவரக் குறிப்பு

சுய குறிப்பு
பெயர்                         பாண்டூ
இயற்பெயர்               ரா. ரமேஷ் ாண்டி (R.RAMESH PANDI)
பெற்றோர்                 ப.ராமசாமி - ரா.ஞானகுரு
துணைவி                   அபிராம சுந்தரி
மகள்                           இலக்கியா
முகவரி                       6, ஜவுளிக்கடை வீதி, சிவகாசி - 626 123
தொலைபேசி             04562-274506(அலு.)
செல்லிடபேசி            98436-10020, 88079-55508
மின்னஞ்சல்               pandukavi16@gmail.com
கல்வி                          இளநிலை பொறியியல் (EEE)
தொழில்                     எழுத்தாளர், பாடலாசிரியர்
பிறந்த தேதி              16 - 12 – 1976

வெளியிட்டுள்ள நூல்கள் :
'வெள்ளை இரவு' -  கவிதைத் தொகுப்பு - 2007
'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' -  கவிதைத் தொகுப்பு – மே 2013
‘எட்டுக்காலியும் இருகாலியும்’ - கவிதைத் தொகுப்பு - செப்  2015
‘டுவிட்டூ’ - கவிதைத் தொகுப்பு - செப் 2015

என்னையும் என் படைப்பையும் உள்ளிட்டு வெளியான நூல்கள் :
1.    நவீன தமிழ் இலக்கியம் சில பார்வைகள் – இரவீந்திரபாரதி
2.    நெருப்பாற்று நீச்சல் – கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி(தொகுப்பாசிரியர்)
3.    செந்தமிழ் ஆய்வுக்கோவை – கவிஞர் சுரா(தொகுப்பாசிரியர்)
4.    வளர் தமிழ் ஆய்வு - 2014 - முனைவர் இளவரசு
(பதிப்பாசிரியர்கள்: சி.மைக்கேல் சரோஜினி பாய், ப.பத்மநாப பிள்ளை, வ.இராசரத்தினம்)


பாராட்டும் பரிசும் பட்டமும் :
1.    23 ஜூலை 2006 – மெல்லத் தமிழினி வாழும்கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
2.    27 அக்டோபர் 2013 – ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
3.    23 டிசம்பர் 2013 – கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
4.    5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
5.    24 ஜனவரி 2016 - சென்னையில் 25 ஆவது வெள்ளி விழா மருத்துவ மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் என்து 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசும், ரூ.2000/- ரொக்கமும் கிடைத்தது.                                                                                                      
தற்போதைய பொறுப்புகள் :
1.         கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2.         கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழு
3.         நீலநிலா இதழ் ஆசிரியர் குழு        
4.         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.

நடத்திய பயிலரங்குகள்:
1.    'படைப்பும் படைப்பாளியும்’- எஸ்.எஃப்.ஆர். கலைக் கல்லூரி, சிவகாசி. 24 ஆகஸ்ட் 2013
2.    'ஒரு நாள் ஹைக்கூ பயிலரங்கு' - விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு. – 15 பிப்ரவரி 2016
3.    'ஒரு நாள் கவிதை சிறுகதைப் பயிலரங்கு' - ஸ்ரீ காளீஸ்வரி கலைக் கல்லூரி, சிவகாசி. – 19 பிப்ரவரி 2016

ஆய்வுக் கட்டுரை:
1.    மருதகாசியும் மக்கள் திலகமும் - தமிழ்த்திரைப்பாக்கூடம் - பிப் 2016

உறுதிமொழி
மேற்கண்ட அனைத்து விபரங்களும் உண்மையானவையே என்பதை இதன்முலம் நான் உறுதியளிக்கிறேன்.
நன்றி.
என்றும் தோழமையுடன்,

பாண்டூ,
சிவகாசி.


எழுத்தாளர், பாடலாசிரியர் பாண்டூவின் வாழ்க்கைக் குறிப்புகள்

எழுத்தாளர், பாடலாசிரியர் பாண்டூவின்
வாழ்க்கைக் குறிப்புகள்

            நீருக்கடியில் நிலம் இருப்பது தெரிந்ததே. ஆனால் நிலத்தடியில் நீர் ஓர் ஆச்சரியம்! அந்த ஆச்சரியத்தைப் போலவே மிக ஆச்சரியமானது கந்தகக்கவி பாண்டூவின் கவிதை. வெயில் சுட்டெரிக்கும் கந்தக மண்ணில், அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயின்ற அவருக்குள் கவிதை ஊற்று எப்படி வற்றாமல் கிடந்தது? சற்று அவரது வாழ்க்கையைப் பார்ப்போமா?

பிறப்பு :
            டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி (மார்கழி 1) 1976 ஆம் ஆண்டு  கவிஞர் பாண்டூ, சிவ்காசியில் ரெங்க்லட்சுமி மருத்துவமனையில் பிறந்தார். அவ்ரது தந்தையார் சாத்தூர் ப்.ராமசாமி மற்றும் தாயார் சிவ்காசி ரா.ஞானகுரு ஆவர். திருமணம் ஆகி 5 வருடம் கழித்து வாராத வந்த மாமணி போல் வந்துதித்த செல்வ மகன் இவர். இவருக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் கிடையாது. இவரது இயற்ப்பெயர் ரா.ரமேஷ் பாண்டி ஆகும். குழந்தை பேறு வேண்டி இராமேஸ்வரத்திற்கும், மதுரை பாண்டி கோயிலுக்கு வேண்டுதல் வைத்துக் கிடைத்ததால், அவரது பெற்றோர்கள் அவருக்கு இப்பெயரைச் சூட்டினர்.

குடும்பம் :
            தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.ஜெ.சோமசுந்தரம் சோ.சங்கரேஸ்வரி தம்பதியர்க்கு மகளாகப் பிறந்த திரு.அபிராம சுந்தரி அவர்களை 29 ஜனவரி 2007 ஆம் ஆண்டு கரம்பிடித்தார். இலக்கியா என்கிற புதல்வியை, 19 ஜூன் 2008 ஆம் ஆண்டு வரமாய் பெற்றார்.

பள்ளிப் படிப்பு :    
            பாண்டூவின் பூர்வீகம் சாத்தூர். அவர் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜியை சாத்தூரில் உள்ள கே.சி.யே.டி பள்ளியில் படித்தார். பின் அவரின் பெற்றோர்கள் சிவகாசிக்குக் குடி வந்தனர். அவர் தனது 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை, சிவகாசியில் உள்ள ஸ்ரீ என்.எம்.மேத்தா ஜெயின் பப்ளிக் பள்ளியில் படித்தார். படிப்பில் கெட்டி. அப்போது சிவகாசியில் இருந்த ஒரே சி.பி.எஸ்.சி பள்ளி அது. அவர் படிப்பில் எப்போதும் இரணடாவது அல்லது மூன்றாவது (ரேங்க்) இடத்தில் இருப்பார். அப்பள்ளி மனன முறைக்கு மாற்றான, சுய சிந்தனையை வளர்க்க உதவியது. இதுவே அவரது படைப்பாற்றலுக்கு வித்திட்டது.
            அவரது பள்ளிக்கால நெருங்கிய நண்பராய் சையத் அபுதாகிர் இருந்தார். அன்னாரது நட்பு இன்றளவும் தொடர்கிறது. மேலும், அவரது நட்பு வட்டத்தில், அமீர் ஜான், வள்ளியப்பன், பாலமுரளி, மணிமாறன், தேவேந்தரன், மோகன், ராஜேஸ் ஆகியோர் இன்றளவும் தொடர்பில், உள்ளனர்.
            அவரது அன்னை ஒரு பக்திமான். வாராவாரம் வெள்ளிக்கிழமையில் வீடு அலசி, விரதமிருந்து மதிய உணவை இறைவனுக்குப் படைத்து உண்ணும் வழக்கமுடையவர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும்  வீட்டில் அவரது தாயார் விளக்கேற்றி பக்திப்பாடல்கள் படிப்பது வழக்கம். கவிஞர் சிறுவயதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயின் மடியில் படுத்தபடி கேட்டப் பகதிப் பாடல்களின் சந்தமும் வண்ணமுமே தமக்குள் தமிழ்ப் பிரவாகம் எடுக்க காரணம் என அவர்தம் 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' எனும் கவிதைத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயங்களிலும், புரியாத மந்திரங்கள் ஜெபிப்பதை விடுத்து, தேவாரத்தையும், திருவாசகத்தையும், ஆழ்வார் பாசுரங்களையும் ஓதுவித்தாலே, தமிழ் ஓங்கும் எனப்து அவர் கருத்து.
            மேலும் அவரது மேல்நிலைப் படிப்பு +1, +2 என்.ஆர்.கே.ஆர். (எ) ஒய்.ஆர்.டீ.வியில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடர்ந்தது. 11 ஆம் வகுப்புத் தமிழ் பரிட்சையில், ஒரு தலைப்புக் கொடுத்து, அத்தலைப்புக்கு கட்டுரையோ கவிதையோ எழுதச் சொல்வார்கள்.  அவர் கவிதையையே தேர்ந்தெடுப்பாராம். அக்கவிதை நன்றாக இருப்பதைப் பார்த்து, தமிழ் ஆசிரியர் திரு.வகுலாபரணன் அய்யா  இவரை ஊக்குவிப்பாராம். அன்று எட்டு வரிகளை எட்டு நிமிடத்தில் எழுதிய(கிறுக்கிய) கைகள் இன்று ஒற்றை வார்த்தைக்கு ஆண்டுக்கணக்கில் தவமிருக்கிறது எனத் தன் படைப்பைச் செழுமையாக்கிட தான் மேற்கொள்ளும் முயற்சியை   நகைச்சுவைப்பட கூறுகிறார் கவிஞர்.
           
கல்லூரி : (1995-1999)
             மெப்கோ பொறியியல் கல்லூரியில் மின்னியல் மினனுவியல்(EEE) பயின்றார். முதல் வகுப்பில் தேர்வாகி பொறியியல் பட்டம் பெற்றார். கல்லூரியில் கவிதைக்கான சூழல் வாய்க்கவே இல்லை என அவர் குறைபட்டுக் கொள்வார். தக்கச் சூழல் அமையாத காரணத்தால், அவரது கல்லூரிக்கால கவிதைகள் டைரியிலேயே முடங்கிப்போயின.
அதே வேளை, பட்டிமன்றங்களை ரசித்து கேட்பது, டேப்-ரிக்கார்டரில், தொலைக்காட்சியில் பாட்ல்களைக் கேட்பது என தமிழ ஊற்று வற்றிடாமல் இருந்தார்.

தொழில் :
            படித்து முடித்ததும், அவருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் கல்கத்தாவில் வேலை கிடைத்தது. ஆனால், ஒரே மகன் என்பதால், அவரது பெற்றோர்கள், அவரை அனுப்ப மறுத்துவிட்டனர். அதனால், அவர் தன்து தாய் மாமா, புதிதாய்த் தொடங்கிய கோகுல் பல்பொருள் அங்காடியை நிர்வகித்தார். 1999 முதல் 2003 வரை அங்கு இருந்தார். அச்சமயத்தில், அவரது கல்லூரி நண்பர் கே.பி.சரவணனிடம் சப் ஏஜெண்டாக,  ஹச்.டி.எஃப்.சி வங்கியின் கார் லோன் பிரிவில் பணி புரிந்தார். உத்திரவாதம் கொடுத்தபடி சரவணனிடம் இருந்து எந்தவித கமிஷன் தொகையும் வராததால் அந்தப்பணியையும் விட்டார். பின் தனது தாய் மாமாவின் பல்பொருள் அங்காடிப்பணியும் அலுப்புத் தட்டவே, அங்கிருந்து வெளியேறி, தனது தந்தையின் இரும்பு மற்றும் பெயிண்ட் கடைக்கு வந்தார். அதை விரிவு படுத்தினார்.
            எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் அங்கிருந்து வெளியேறித் தன் தாய்மாமாவின் பட்டாசு ஆலையில் பணி புரிந்தார். அங்கு பட்டாசு முகவராக, குஜராத் மாநிலத்திற்குப் போய் வந்தார்.
            பட்டாசுத் தொழிலும் காலப்போக்கில் நலிந்துவரும் காரணத்தால், தற்போது தனது தந்தையின் இரும்புக்கடையை, லக்கி கோல்டு கவரிங் என் மாற்றி கவரிங் வியாபாரம் செய்கிறார். மேலும் தனது நண்பர்களான சையத் அபுதாகீருடன் இணைந்து ரியல் எஸ்டேட் முகவராகவும் பணி புரிந்துள்ளார்.

இலக்கியப் பணி:
            கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி இவரது அண்டை வீட்டார் ஆவார். ஆனால், அவர் கவிதை எழுதுவார் என இவருக்கோ, இவர் கவிதை எழுதுவார் என அவருக்கோ தெரியாது. ஆனால், 2003 ஆம் ஆண்டில், கவிஞர் தனது இருமபுக்கடையில் வைத்துத் தனது டைரியில் கவிதை எழுதிக் கொண்டிருந்தார். தற்செயலாக, அங்கு வந்த கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, அவரும் அவரது நண்பர் யுவபாரதியும் இணைந்து 'கந்தகப்பூக்கள்' என்கிற இலக்கிய அமைப்பு நடத்துவதாகவும், மாதாமாதம் இரண்டாவது ஞாயிறு தொடர்ந்து படைபரங்கம் நடப்பதாகவும்,  அங்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார். இவவாராகத்தான் பாண்டூவின் இலக்கியப்பணி தொடங்கியது.

            கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் தொடர்பு, பாண்டூவின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவரது டைரியில், மீரா, மாயா, பாண்டு எனப் பல்வேறு புனைப்பெயரில் எழதி இருந்தார். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதிதான், இவருக்கு பாண்டூ என்ற பெயர் சூட்டி அழகுபார்த்தார்.
            பாண்டூவின் கவிதை ஊற்றைக் கண்டறிந்து, அதை வெளிக்கொணந்த பெருமை கந்தகப்பூக்கள் அமைப்பையே சாரும். கந்தகப்பூக்கள் படைப்பரங்கில் பிள்ளையார் குறித்த கவிதை ஒன்றை பாண்டூ கலந்து கொண்ட முதல் நிகழ்வில் வாசித்தார். அக்கவிதைக்கு முனைவர் திரு. பொ.நா.கமலா அவர்களின்  விமர்சனம் அவருககு உத்வேகமூட்டியது. மேலும், தோழர் யுவபாரதியின் விமர்சனம் அவரைப் பட்டை தீட்டியது எனலாம்.
            அடுத்ததாக், "உழைத்துக் கொண்டே இரு/ சோமபல் களைத்துப் போகும் வரை" என்கிற பாண்டூவின் கவிதை கந்தகப்பூக்கள் சிற்றிதழில் வெளிவந்தது. தனது படைப்பை முதன்முதலில் அச்சில் பார்த்த பெருமிதம், மேலும் அவரை ஊக்கப்படுத்தியது. அங்கு கிடைத்த திரு. கவிக்குயில் ஞானன் அய்யாவின் தொடர்பு அவரை இன்னொரு தளத்திற்கு உயர்த்தியது எனலாம்.
            இவ்வாறாக, கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பில், உறுப்பினராய், பின் அதன் பொருளாள்ராய், செயலாளராய் என பல்வேறு பொறுப்புகளில் அவர் செம்மையாக பணியாற்றினார். அது அவருக்கு இலக்கிய ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் செயல்பட ஒரு பயிற்சிக் க்ளமாக அமைந்தது, சமூகம் பற்றிய ஒரு புரிதலையும் பக்குவத்தையும் கொடுத்தது. இதுவே, அவர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில், சிவகாசிக் கிளைச் செயலாளராகவும், தற்போது மாவட்டத் துணைச் செயலாளராகவும் உயர்த்தியது எனலாம்.

கைகொடுத்த நட்புகள் :

 1. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி:
            எங்கு இலக்கியக் கூட்டம் இருந்தாலும் அங்கு இருப்பார் எனும் அளவிற்கு எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் பாண்மை உடையவர். இவர், தான் கற்றறிந்த வற்றை பலரோடும், பகிர்ந்து கொள்பவர். விவாதம் மூலம் அறிவை விசாலப்படுத்துபவர். கந்தகப்பூக்கள் அமைப்பின் மூலம் எண்ணற்ற படைப்பாளிகளை வளர்த்து உருவாக்கிக் கொண்டிருப்பவர். கந்தகப்பூக்கள் பதிப்பகம் மூலம், எண்ணற்ற புதிய படைபாளிகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. பொறியாளர் பாண்டூவிற்கு, கைகொடுத்து இலக்கிய ஏணியில் ஏற்றிவிட்ட பெருமை இவரையே சேரும். தோள் கொடுத்த தோழனாய் நின்று சக படைப்பாளிகளின் வளர்ச்சி கண்டு பூரிப்படைபவர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி. அவர் இவருக்கு ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார். இவருக்குத் தன்து 'டுவிட்டூ' என்கிற நூலைக் காணிக்கையாக்கி சிறப்பித்திருக்கிறார்.

 2.யுவபாரதி, கந்தகப்பூக்கள்:
            கந்தக்ப்பூக்கள் இலக்கிய அமைப்பை உருவாக்கியவ்ருள் ஒருவர். இவருடைய கூறான விமர்சனங்கள், படைப்பாளியைக் குத்திக்கிழிக்காமல், படைப்புகளை நேர் செய்யும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத பெருந்தகையாள்ர். அன்னாரின் நட்பு, பாண்டூவின் படைப்பை, உளிபட்ட சிற்பமெனச் செதுக்கி மேன்மையுறச் செய்தது எனலாம். இவருக்குத் தன்து 'டுவிட்டூ' என்கிற நூலைக் காணிக்கையாக்கி சிறப்பித்திருக்கிறார்.

 3.நீலநிலா செண்பகராசன்:
            சக படைப்பாளியான இவர், நீல நிலா என்கிற சிற்றிதழை நடத்தி வருகிறார். புதுக்கவிதையின் நவீன வடிவமான் ஹைக்கூ, சென்ட்ரியு, பழமொன்றியு, ரென்கா போன்றவற்றில் தேர்ச்சி உடையவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர்க் கிளையின் செயலாளர். நல்ல மனிதர். இவரது நட்பு, பாண்டூவை கந்தகப்பூக்களைத்தாண்டி பல சிற்றிதழாளர்களிடம் கொண்டு சென்றது. பாண்டூவின் முதல் ஹைக்கூ முயற்சிகள் இவரது படைப்பரங்கில் வாசிக்கப்பட்டதே. தற்போதைய புதிய முயற்சியான 'டுவிட்டூக்கள்'க்கு வித்திட்டதில் இவரது பங்கும் உண்டு. இவருக்குத் தன்து 'டுவிட்டூ' என்கிற நூலைக் காணிக்கையாக்கி சிறப்பித்துள்ளார் பாண்டூ.
            மேலும் சங்க இலக்கியத்தை அவருக்கு எளிய முறையில் அறிமுகம் செய்த ஆய்வாளர் திரு.பொ.நா.கமலா அம்மா, தமிழ்ச்சுவை ஊட்டிய கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செம்மைநதிராசா அய்யா , மூத்த படைப்பாளர் கொ.மா.கோதண்டம் அய்யா, இராஜேஸ்வரி கோதண்டம் அம்மா, கோதையூர் மணியன் அய்யா, நகைச்சுவை எழுத்தாளர் மருத்துவர் ஆர்.எம்.ஆர். சாந்திலால், 'வாரமுரசு' ராஜா சொர்ணசேகர் அய்யா, இயக்குநர் இலக்கிய ராஜா, சிறுகதையாளர் ஸ்வரமஞ்சரி, கவிஞர் இராகவன், கவிஞர் கனிமொழி கருப்பசாமி, பாடகர் இ.கி.முருகன், சிறுகதையாளர் கலாராணி, எழுத்தாளர் முத்துபாரதி, சரணிதா, ஓவியர் கணேசன், பொம்மை நாகராசன், 'நந்தலாலா' வைகறை, நாணற்காடன், கலிய மூர்த்தி, கண்மணி ராசா, தொல்பொருள் ஆய்வாளர் பாலச்சந்திரன் அய்யா, மதிக்கண்ணன், இராஜா கண்ணன், மாரிச்செல்வம், விநோதன் மற்றும் மாரிமுத்து ஆகியோர்  இவரது  பயணத்தில் உறுதுணையாய் நின்று தோள் கொடுக்கும் தோழர்கள்.

ஞானகுரு:
            பாண்டூவின் தாயார் பெயர் ஞானகுரு. ஆனால், படைப்புலகில், பாண்டூவின் ஞானகுருவாக நின்றவர், ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் அவர்கள். அவரது முழுப்பெயர் செ.சங்கீத ஞான பாண்டியன். பிரபல எழுத்தாளரான தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் நெருங்கிய உறவினர். பாண்டூவிற்கு இலக்கணப் பாலூட்டிச் சீராட்டியவர். மரபெனும் ஊட்டம் ஊட்டி பூரிக்கச் செய்தவர். மார்க்சிய உரமிட்டு பண்படுத்தியவர். ஞானக்குயில் கவிஞர் திரு.செ.ஞானன் அவர்களின் அறிமுகம் அவரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. மரபையும், மார்க்ஸ்ஸையும் கற்றுத்தந்தார். இலக்கிய ஆசான் ஜீவாவை அறிமுகம் செய்தார். நச்சிலக்கியம் போக்கி நல்லிலக்கியம் படைக்க, நற்பாதை போட்டுக் கொடுத்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்ற ஜீவநதியில் கலக்கச் செய்தார். பாண்டூ அவர்கள் இலக்கிய வானில் உயரப்பறக்க  குருவாய் நின்ற திரு.ஞானனின் பங்கு அளப்பரியது. 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' நூலுக்கு தனது குருவான் திரு.ஞானன் அய்யாவின் முன்னுரை வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறாமல் போனது வருத்தமே. அந்நூலையும், ஜனவரியில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்ஸின் வெளியீடாக வரஇருக்கும் 'பி-பாசிடிவ்' என்கிற முதல் சிறுகதைத் தொகுப்பையும் அன்னாருக்கு காணிக்கையாக்கி அகம் மகிழ்ந்திருக்கிறார்.

தமிழன்னை :
            தள்ளாத வயதிலும், தனது முதுமையையும், பிணியையும் பொருட்படுத்தாது ஒவ்வொரு படைப்பரங்கிலும் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான விமர்சனமும் வழங்கி சிறப்பிப்பவர் முனைவர் பொ.நா.கமலா அம்மா அவர்கள். அவர்களது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் அனைவருக்கும் ஒரு உந்துதலாக இருக்கும். படைப்பரங்கில் அவர் எடுத்த சங்க இலக்கிய அறிமுகம் என்கிற பகுதி பாண்டூ அவர்களை சங்க இலக்கியம் பக்கம் தன் பார்வையை திருப்பியது என அவரே கூறுகிறார். அவரது உரையாடலும், ஆர்வமும், வேகமும், முனைப்பும், தமிழ் அன்னையே நேரில் வநதது போல் இருக்கும் எனப் பரவசப்படும் பாண்டூ அவர்கள், அன்னாருக்குத் தனது ‘எட்டுக்காலியும் இருகாலியும்’ என்கிற நூலைக் காணிக்கை ஆக்கி இருக்கிறார்.

இடம்கொடுத்த அமைப்புகள்:

1.கந்தகப்பூக்கள்:
            கந்தகப்பூக்கள் அமைப்பு, பாண்டூவை இலக்கிய உலகில் கால் பதிக்க எவ்வளவு உறுதுணையாக இருந்தது என நாம் சொல்லித் தெரிய அவசியமில்லை. டைரிக் கவிஞரை, கைப்பிடித்து, ஈராயிர வருடம் பழமையான், செறிவான தமிழ் இலக்கியப் பரப்பில் அவருக்கும் ஓர் இடத்தினை உறுதிப்படுத்தக்கூடிய, தகுதியனைத்தையும் உண்டாக்கித்தந்தது, கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி மற்றும் யுவபாரதி நட்த்திய கந்தகப்பூக்கள் எனும் அமைப்பே ஆகும்.

2.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்:
            நச்சு இலக்கியத்திற்கு எதிரான நல்ல இலக்கியம் பேசுவோம் என, பொதுஉடைமைத் தோழர் பேராசான் ஜீவா தொட்ங்கிய அமைப்பு. கந்தக்ப்பூக்கள் ஸ்ரீபதி, யுவபாரதி மற்றும் செ.ஞானன் அவர்கள் முயற்சியால், சிவகாசியில் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்குச் செயலாளராய் பாண்டூ இருந்தார். கலை இலக்கிய மன்றத்தின் தொடர்பு அவருக்கு அடுத்தக் கட்ட வளர்ச்சியைக் கொடுத்தது. சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான திரு.பொன்னீலன் போன்றோரின் தொடர்பு கிடைத்தது. கலை இலக்கியப் பெருமன்றம் அவருக்கு மார்க்சிய தத்துவ புரிதலையும், அவரது படைப்பில் மார்க்சிய நோக்கையும் உண்டாக்கியது. மார்க்சிய அடிப்படையை விளங்கிக் கொள்வதற்கு பேராசிரியரி திரு.முத்துமோகன் அவர்களின் மார்க்சிய வகுப்புகள் துணை புரிந்தன.

            புதுப்படைப்பாளியான, இவரது முதல் நூல் 'வெள்ளை இரவை' நல்ல முறையில் விமர்சனம் செய்து அதைத் தனது நூலிலும் பதித்து பெருமிதமும், ஊக்கமளித்த இரவிந்திர பாரதி அய்யா, சித்தாந்த அறிவை நாளும் புகட்டி, பல நூல்கள் எனக்கு படிக்கச் சொல்லி ஆர்வம் ஊட்டும்  தொல்பொருள் ஆய்வாளர்  தோழர் பாலச்சந்தர் அய்யா, 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' கவிதைத் தொகுப்பிற்கு அணிந்துரையும் தந்து, வெளியீட்டு விழாவில் கலந்தும் வாழ்த்தி, வழிகாட்டி சிறப்பித்த திரு. பொன்னீலன் அய்யா மற்றும் திரு. காமராசு அய்யா அவர்கள் அனைவரும் இம்மன்றத்தின் இளம் படைப்பாளிகளை இனம்கண்டு ஊக்குவித்து பரிணமிக்கச் செய்யும் சிற்பிகள். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் (சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராச்பாளையம், சத்திரப்பட்டி, அருப்புக்கோட்டை) மட்டும் 7 கிளைகள் தோய்வின்றி இயங்கி வருவது அவரது வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இலக்கியப் பரப்பில் அவர் மக்களுக்கான படைப்பாளியாய் இம்மன்றங்களின் மூலம் ஏற்றம் கண்டார்.

3.கோவில்பட்டிக் கம்பன் கழகம்:
            அனைத்துக் கம்பன் கழகத்தை விட, வித்தியாசமாக சிறப்பாக படைப்பரங்கத்தை வடிவமைத்துக் கொண்டது கோவில்பட்டிக்  கம்பன் கழகம். இதைத் திரு.செம்மைநதிராசா அய்யா அவர்கள் நடத்தி வருகிறார். சிவகாசியில் நடைபெற்ற பூங்காக் கவியரங்கத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம். பல்தரப்பட்ட இலக்கியச் சுவையைப் பருகக்கொடுத்து, பாண்டூவின் படைப்பாற்றலை வளர்க்க பேருதவி புரிந்தது கோவில்பட்டிக் கம்பன் கழகம்.
            மேலும் முனைவர் சு.நயினார் நடத்தும் வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, திரு.திலகபாமா நடத்தும் பாரதி இலக்கியச் சங்கம், ரணிதா நடத்தும் விருதுநகர் இலக்கியா வாசகர் வட்டம், முனைவர் வினோத் நடத்தும் விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம்,  திரு.மதிக்கண்ணன் நடத்தும் அருப்புக்கோட்டை மானுட விடுதலைப் பண்பாட்டுக்கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், மதுரை கூழாங்கற்கள் மற்றும் செவல்பட்டி 'நம்ம செவல்' ஆகிய இலக்கிய அமைப்புகளும் அவருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகின்றன.

ஆதரித்த இதழ்கள் :
            கந்தகப்பூக்கள், நீலநிலா, ஏழைதாசன், பயணம், வளரி, கதவு, இன்று மலர், உண்மை, ராணி, தினமணி, புதுப்புனல், நிகரன், என்லைட்டர், ஆரத்தி,  வணக்கம் சிவகாசி, எஸ்.பி.பி.போஸ்ட், உங்கள் நூலகம்,  திணை, ஜனசக்தி மற்றும் தாமரை ஆகிய இதழ்களில் பாண்டூவின் படைப்புகள் வெளிவந்துள்ளன.

ஆதரித்த இணையதளங்கள் :
www.vaarppu.com
www.orukavithai.com
www.kandhagapookal.blogspot.com
www.malaigal.com
www.nerruppoo.blogspot.com
www.unmaionline.com
www.periyarpinju.com
www.thozharjeeva.blogspot.in
www.penmai.com
www.nanthalaalaa.com
www.pandukavi16.blogspot.in
www.neelanilaa.blogspot.in
போன்ற இணைய தளங்கள் பாண்டூவின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளன்.

ஆதரித்த ஊடகங்கள் :
            கோடைப் பண்பலையிலும், ஆல் இந்தியா  வானொலி நிலையத்திலும் இவரது படைப்புகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன; டிடி பொதிகையில் இவரது 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' நூல் விமர்சனம் 'இலக்கிய ஏடு' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது, மேலும், பாடலாசிரியர் பிறைசூடன் ஒருங்கிணைத்த 'கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்' நிகழ்விலும் கலந்துகொண்டார். இந்நிகழ்வினை யூ-டியூப்பில் இப்போதும் ரசிக்கலாம்.

ஆதரித்த கல்லூரிகள் :
            எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரியில் பல்வேறு இலக்கிய நிகழ்வில் பங்கெடுத்துள்ளார். மாணவர்களுக்கு கவிதை குறித்த பயிற்சிப் பட்டறையிலும் பயிற்றுனராய் சிறப்பித்துள்ளார். 'படைப்பு அகமும் புறமும்' என்கிற கந்தகப்பூக்கள் ஸ்ரீபதியின் கூட்டுக் கட்டுரைத்தொகுப்பில் இவரது கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அது அங்கு பாடத்திட்டத்திலும் உள்ளது. வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி பாராட்டுப் பத்திரமும், ரொக்கப்பரிசும் வழங்கி சிறப்பித்துள்ளது. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் 'புத்தகம் அழைக்கிறது' என்கிற இவரது கவிதைப் பாடத்திட்டத்தில் உள்ளது. காளீஸ்வரி கல்லூரியிலும் பல்வேறு இலக்கிய நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.




ிருதுகள் :
            23 ஜூலை 2006 இல், 'மெல்லத் தமிழினி வாழும்' கவிதைக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கி கருங்குழி-திருவள்ளுவர் தமிழ் பட்டறை சிறப்பித்தது.
            5 ஜனவரி 2014 இல் தியாகி டி.எம்.சுவாமிநாதன் & தோப்பூர் சுப்பிரமணியம் நினைவு விருது வழங்கி சென்னை மருத்துவ அறிவியல் கழகம் சிறப்பித்தது.

ட்டம் :
            ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் 'துளி' திங்களிதழ் இவருக்கு, 27 அக்டோபர் 2013 இல் 'கந்தகக்கவி' என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
            கவிஞர் சுராவின் 'செந்தமிழ் அறக்கட்டளை' மற்றும் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனம் இவருக்கு, 23 டிசம்பர் 2013 இல் 'கவிச்செம்மல்' பட்டமும் ரூ.1000 ரொக்கமும் வழங்கிக் கெளரவித்தது.

நடத்திய பொது நிகழ்ச்சிகள் :
          கவிதைத் திருவிழா - 2014: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரும் இணைந்து 31.12.2014 அன்று கல்லூரி மாணாக்கர்களுக்கு இடையே கவிதைத் திருவிழா நடத்தப்பட்டது.
          மக்கள் கலை விழா - 2015: தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் சிவகாசி கிளை சார்பில் 31.01.2015 சனியன்று மாலை 5 மணியளவில் சிவகாசி பாவடித் தோப்பில் மக்கள் கலை விழா - 2015 ஞானக்குயில் கவிஞர் ஞானன் நினைவாக நடத்தப்பட்டது.

பாண்டூவின் பன்முகம் :

  1. சிறுகதையாளர் :- 
            கவிஞர் பாண்டூ கவிதைகள்  மூலம், இலக்கியப் பரப்பில் காலூண்றியவர். கவிதை மட்டுமல்லாது சிறுகதை பக்கமும் அடியெடுத்து வைத்துள்ளார். ஆரம்ப கட்ட எழுத்தாளர் போல் இல்லாமல், அவர் சிறுகதையில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. எடுத்துக் கொண்ட கருப்பொருளிலும், சொல்கின்ற உத்தி முறைகளிலும் புதுமையாக உள்ளது. அவரது முத்தான பத்து கதைகளை நியு செஞ்சுரி புக் ஹவுஸ், தனது சொந்த  வெளியீடாக ஜனவரி 2016 ஆம் ஆண்டு கொண்டு வர சம்மதித்திருப்பதே அவரது கதைகளின் தரத்தைப் பறைசாற்றும்படி இருக்கிறது. அச்சிறுகதைத் தொகுப்பிற்கு 'பி-பாசிடிவ்' எனப் பெயர் சூட்டியுள்ளார்.

  1. கட்டுரையாளர் :-
            தான் படைப்பதோடு மட்டுமல்லாது, சக படைப்பாளியின் படைப்பை வாசிப்பதும், நேசிப்பதும், விமர்சிப்பதுமே சிறந்த படைப்பாளிக்கான இலக்கணம். அவ்வகையில் பாண்டூ சகப் படைப்பாளியை ஊக்கிவிக்கிறார், அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார். இதுவே, அவரது ஆக்கப்பூர்வமான விமர்சனக் கட்டுரைகளை அவருக்கு அள்ளித் தருகிறது. நீல நிலா செண்பகராசனின் தூண்டுதலின் பேரில், நீல நிலா இதழுக்காக விமர்சன்ங்கள் எழுதத் தொடங்கியவர். பின் நல்ல விமர்சகராக ஞானக்குயில் செ.ஞானன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, யுவபாரதி ஆகியோரின் வழிகாட்டுதலோடு பரிணமிக்கிறார். அவரது 'திருதிராஷ்டிர ஆலிங்கனம்' எனும் கட்டுரைத் தொகுப்பு மதிகனலி எனும் புனைப்பெயரில் கந்தக்ப்பூக்கள் வெளியீடாக ஜனவை 2016 இல் வெளிவர இருக்கிறது. 

  1. பாடலாசிரியர் :-
          கவிஞர் பாண்டூ மரபில் தேர்ச்சி பெற்றவர். எழுத்தை எண்ணி பாடல் இயற்றும் கட்டளைக் கலித்துறையில் (அபிராமி அந்தாதி பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்தது) எழுத வல்லவர். இதை எழுதத்தெரிந்தவர்கள் மொத்தத்தில் 20 பேர்களுக்குள்ளே தான் இருப்பார்கள். மரபுக்கவிதை எழுதிப் பயின்றதால் சந்தம் அவருக்கு இயற்கையாகவே கைவரப் பெற்றது எனலாம். அவரது பலக் கவிதைகள் பாடலாகப் பாடக்கூடியவையே.
            திரைத்துறையயில் பாடலாசிரியராக வேண்டும் என்பது அவருடைய கனவு. அதற்காக, அவர் முறையாக் பயின்றும் வருகிறார். திரைப்பாடல் பயிற்சிக்கெனவே பாடலாசிரியர் பிரியன் தமிழ்த்திரைப்பாக் கூடம் எனும் அமைப்பைச் சென்னையில் நிறுவி கடந்த மூன்று ஆண்டுகளாகத் திறம்பட நடத்தி வருகிறார். திரைப்பாடலாசிரியர்களான பிரியன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் திரைப்பாக் கூடத்தில் பயிற்சி அளிக்கப் பாடலாசிரியர் பட்டயப் படிப்பு படித்து வருகிறார். விரைவில், அவரது பாடல்கள் 'தெத்துப்பல்லுக்காரி' எனும் ஆல்பமாக வெளிவர இருக்கிறது.
திரையில் இவரது பாடல் விரைவில் ஒலிக்கும் எனும் நம்பிக்கையை இவரது நூல்கள் நமக்குத் தருகிறது.  

  1. பயிற்றுநர்:-
எழுத்தாளர் பாண்டூ அவர்கள் மாணவர்களுக்கு படைப்பிலக்கியத்தில் ஆர்வமும் ஊக்கமும் அளிக்கும்படியான, மாணவர்களே ஒரு படைப்பாளியாய் பரிணமிக்கும்படியான  கீழ்க்கண்ட பயிலரங்குளை நடத்தி உள்ளார்.
1.    'படைப்பும் படைப்பாளியும்’- எஸ்.எஃப்.ஆர். கலைக் கல்லூரி, சிவகாசி. 24 ஆகஸ்ட் 2013
2.    'ஒரு நாள் ஹைக்கூ பயிலரங்கு' - விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு. – 15 பிப்ரவரி 2016
3.    'ஒரு நாள் கவிதை சிறுகதைப் பயிலரங்கு' - ஸ்ரீ காளீஸ்வரி கலைக் கல்லூரி, சிவகாசி. – 19 பிப்ரவரி 2016



ுய விபரக் குறிப்பு
பெயர்                         :           பாண்டூ
இயற்பெயர்               :           ரா. ரமேஷ் ாண்டி (R.RAMESH PANDI)
பெற்றோர்                 :           ப.ராமசாமி - ரா.ஞானகுரு
துணைவி                   :           அபிராம சுந்தரி
மகள்                           :           இலக்கியா
முகவரி                       :           6, ஜவுளிக்கடை வீதி,
                                                சிவகாசி - 626 123
தொலைபேசி             :           04562-274506(அலு.),
                                                04562-272505(வீடு)
செல்லிடபேசி            :           98436 10020
மின்னஞ்சல்               :           pandukavi16@gmail.com
கல்வி                          :           இளநிலை பொறியியல் (EEE)
தொழில்                     :           எழுத்தாளர், பாடலாசிரியர்
பிறந்த தேதி              :           16 - 12 - 1976

வெளியிட்டுள்ள நூல்கள் :
1. 'வெள்ளை இரவு' கவிதைத் தொகுப்பு - 29 ஏப்ரல் 2007
2. 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' கவிதைத் தொகுப்பு - மே 2013
3. 'எட்டுக்காலியும் இருகாலியும்' கவிதைத் தொகுப்பு - செப் 2015
4. 'டுவிட்டூ' டுவிட்டூக்கள் தொகுப்பு - செப் -2015
(அனைத்து நூல்களும் கந்தகப்பூக்கள் பதிப்பகம் வெளியீடு)

என்னையும் என் படைப்பையும் உள்ளிட்ட வெளியான நூல் :
1.    நெருப்பாற்று நீச்சல் -கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி(தொகுப்பாசிரியர்) – 2009
2.    நவீன தமிழ் இலக்கியம் சில பார்வைகள் – இரவீந்திரபாரதி - 2013
3.    செந்தமிழ் ஆய்வுக்கோவை - கவிஞர் சுரா(தொகுப்பாசிரியர்) – 2013
4.    வளர் தமிழ் ஆய்வு - முனைவர் இளவரசு - 2014
(பதிப்பாசிரியர்கள்: சி.மைக்கேல் சரோஜினி பாய், ப.பத்மநாப பிள்ளை, வ.இராசரத்தினம்)


வெளிவர இருக்கும் நூல்கள் :
1. 'பி-பாசிடிவ்' சிறுகதைத் தொகுப்பு        
2. 'திருதிராஷ்ட்ர ஆலிங்கனம்' கட்டுரைத் தொகுப்பு  
           
பாராட்டும் பரிசும் பட்டமும் :
1.         23 ஜூலை 2006 - “மெல்லத் தமிழினி வாழும்” கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது.
2.         27 அக்டோபர் 2013 - ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
3.         23 டிசம்பர் 2013 - கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
4.         5 ஜனவரி 2014 - சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
5.         24 ஜனவரி 2016 - சென்னையில் 25 ஆவது வெள்ளி விழா மருத்துவ மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் என்து 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசும், ரூ.2000/- ரொக்கமும் வழங்கியது.

தற்போதைய பொறுப்பு :
1.  கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2.  கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழு
3. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
4.  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.




படைப்புகளை வெளியிட்டுள்ள இணையதளங்கள் :
www.vaarppu.com
www.orukavithai.com
www.kandhagapookal.blogspot.in
www.pandukavi16.blogspot.in
www.thozharjeeva.blogspot.in
www.nerruppoo.blogspot.in
www.unmaionline.com
www.periyarpinju.com
www.malaigal.com
www.penmai.com
www.nanthalaalaa.com
www.neelanilaa.blogspot.in

கவிதைகளை வெளியிட்டுள்ள இதழ்கள் :
1.கந்தகப்பூக்கள்
2.தினமலர் வாரமலர்
3.என்லைட்டர்
4.நீலநிலா
5.ஏழைதாசன்
6.வணக்கம் சிவகாசி
7.பயணம்
8.எஸ்.பி.பி. போஸ்ட்
9.வளரி
10.கதவு
11.இன்று மலர்
12.உண்மை
13.ஜனசக்தி
14.ஆரத்தி
15.தாமரை
16.உங்கள் நூலகம்
17.ராணி

படைப்புகளை வெளியிட்டுள்ள ஊடகங்கள் :
1.         கோடைப்பண்பலை வானொலி நிலையம்
2.         டிடி பொதிகை
3.         ஆல் இந்தியா வானொலி

பயிற்சிப் பட்டறை :
1.            24 ஆகஸ்ட் 2013 - எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரி நடத்திய ‘படைப்பும் படைப்பாளியும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் சிறுகதைக்கானப் பயிலரங்கில் பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டேன்.
2.            15 பிப்ரவரி 2016 - 'ஒரு நாள் ஹைக்கூ பயிலரங்கு' - விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு. 
3.            19 பிப்ரவரி 2016 - 'ஒரு நாள் கவிதை சிறுகதைப் பயிலரங்கு' - ஸ்ரீ காளீஸ்வரி கலைக் கல்லூரி, சிவகாசி

படைப்புகள் அரங்கேற்றிய அமைப்புகள் :
1.         கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு, சிவகாசி
2.         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
3.         கம்பன் கழகம், கோவில்பட்டி
4.         மானுட விடுதலைப் பண்பாட்டுக்கழகம், அருப்புக்கோட்டை
5.         அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், விருதுநகர்
6.         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்
7.         இலக்கியா வாசகர் வட்டம், விருதுநகர்
8.         பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
9.         அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி
10.       காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி
11.       திருவள்ளுவர் தமிழ்ப்பட்டறை
12.       கோடைப் பண்பலை
13.       கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு, மதுரை
14.       டிடி பொதிகை




படைப்புகள் வெளியானவை :
1.         2003 - துளிப்பா ஒன்று ‘கந்தகப்பூக்கள்’ சிற்றிதழில் பிரசுரம்.
2.         செப் 2005 - “தமிழ்த்தாய் வாழ்த்து” கவிதை கந்தகப்பூக்கள் சிறப்பிதழில் பிரசுரம்.
3.         20 நவம் 2005- “வானவில் காயங்கள்” கவிதை ‘தினமலர் - வாரமலர்’ இதழில் பிரசுரம்.
4.         ஜூன் 2006 - “தாய் மண்ணே வணக்கம்” கவிதை என்லைட்டர் இதழில் பிரசுரம்.
5.         23 ஜூலை 2006 - “மெல்லத் தமிழினி வாழும்” கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
6.         24 மார்ச் 2007 - “காலம்” கவிதை கோடை பண்பலையில் கதவைத் தட்டும் கற்பனைகள் பகுதியில்  வாசிக்கப்பட்டது.
7.         மே 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை வளரி இதழில் பிரசுரம்.
8.         12 மே 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் வெளீயீடு.
9.         ஏப்ரல்-ஜூன் 2013 - ஹைக்கூக்கள் ‘மின்மினி’ இதழில் பிரசுரம்.
10. ஜூன் 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் அறிமுகம்.
11. ஜூலை 2013 - “உலகமயம்” ஹைக்கூ பயணம் இதழில் பிரசுரம்.
12. ஜூலை 2013 - “புத்தகம் அழைக்கிறது” கவிதை ஆரத்தி இதழில் பிரசுரம்.
13. 13 ஜூலை 2013 - “சாகா சரித்திரம்” கவிதை ’ஜனசக்தி’ நாளிதழில் பிரசுரம்.
14. ஜூலை 2013 - “மீண்டும் தொடர்கதை” கவிதை ‘அன்பே இன்று மலர்’ இதழில் பிரசுரம்.
15. ஜூலை 2013 - “உலகமயம்” ஹைக்கூ ‘பயணம்’ இதழில் பிரசுரம்.
16. ஜூலை 2013 - “புத்தகம் அழைக்கிறது” கவிதை ‘ஆரத்தி’ இதழில் பிரசுரம்.
17. 24 ஜூலை 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் விமர்சனம் ’தினத்தந்தி’ மதுரைப் பதிப்பில் புத்தக மதிப்புரை பகுதியில் பிரசுரம்.
18. 28 ஜூலை 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் மதிப்புரை ’ஜனசக்தி’ நாளிதழில் பிரசுரம்.
19. 28 ஜூலை 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் மதிப்புரை ’ஜனசக்தி’ நாளிதழில் பிரசுரம்.
20.       28 ஜூலை 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் மதிப்புரை ’டிடி பொதிகை’ தொலைக்காட்சியில் இலக்கிய ஏடு பகுதியில் பிரசுரம்.
21.       ஆகஸ்ட் 2013 - “தாய் மண்ணே வணக்கம்” கவிதை ‘ஆரத்தி’ இதழில் பிரசுரம்.
22.       11 ஆகஸ்ட் 2013 - “சுதந்திர சிறகுகள்” கவிதை ‘தினமலர்-வாரமலர்’ இதழில் பிரசுரம்.
23.       24 ஆகஸ்ட் 2013 - எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரி நடத்திய ‘படைப்பும் படைப்பாளியும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் சிறுகதைக்கானப் பயிலரங்கில் பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டேன்.
24.       ஜூலை - ஆகஸ்ட் 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் விமர்சனம் ’புதுவை கவிதை வானில்’ சிற்றிதழில் பிரசுரம்.
25.       8 செப்டம்பர் 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் விமர்சனம் ’குமுதம்’ வார இதழில் பிரசுரம்.
26.       செப்டம்பர் 2013 - “பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்” கவிதை நூல் விமர்சனம் ’உங்கள் நூலகம்’ இதழில் பிரசுரம்.
27.       செப்டம்பர் 2013 - ‘என் தங்கை’ கவிதை ‘ஆரத்தி’ இதழில் பிரசுரம்.
28.       அக்டோபர் 2013 - ஹைக்கூ ‘ஆரத்தி’ இதழில் பிரசுரம்.
29.       27 அக்டோபர் 2013 - ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
30.       31 அக்டோபர் 2013 - ‘பீலிக்காடு’ சிறுகதை ‘மலைகள்.காம்’ (www.malaigal.com) இணைய இதழ் 37-இல் பிரசுரம்.
31.       டிசம்பர் 2013 - “பாரதியின் தாசனிவன் பாட்டினைக் கேளு” கவிதை ‘பெரியார் பிஞ்சு’வில் பிரசுரம்.
32.       23 டிசம்பர் 2013 - கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
33.       ஜனவரி 2014 - “அம்மா” கவிதை ‘ஆரத்தி’ இதழில் பிரசுரம்.
34.       04 ஜனவரி 2014 - தோழர் வி.கார்மேகம் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நரிமேடு கிளை, மதுரை நடத்திய இசைப்பாடல் போட்டியில் கலந்துகொண்டமைக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
35.       5 ஜனவரி 2014 - சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
36. ஏப்ரல் 2014 - 'பிணவெழுத்து' கவிதை இன்மை.காம் மின்னிதழில் பிரசுரம்.
37. ஜூன் 2014 - 'நீதிமான்களுக்கு வேலை இல்லை' கவிதை நந்தலாலா.காம் இணைய இதழில் பிரசுரம்.
38. 1-15 ஜீலை 2014 - 'சட்டை' சிறுகதை 'உண்மை' இதழில் பிரசுரம்.
39. 18 ஜுலை 2014 - விதைத் துளிர்கள் அமைப்புடன் இணைந்து வடமலாபுரம் அரசுப் பள்ளியில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.
40. 7 செப்டம்பர் 2014 - தினமணியில் தமிழ்மணி பகுதியில், கலாரசிகனின் இந்தவாரம் பத்தியில் எனது கவிதை பிரசுரம்.
41. 14 செப்டம்பர் 2014 - ஆல் இந்தியா வானொலியில் 'இலக்கிய உலா' நிகழ்ச்சியில் என் கவிதை வாசிப்பு.
42. அக்டோபர் 2014 - 'டுவிட்டூ'க்கள் 'நீலநிலா' இதழில் பிரசுரம்.
43. 25 ஜனவரி 2015 - தினமணியில் தமிழ்மணி பகுதியில், கலாரசிகனின் இந்தவாரம் பத்தியில் எனது கவிதை பிரசுரம்.
44. பிப்ரவரி 2015 - 'டுவிட்டூ'க்கள் 'நீலநிலா' இதழில் பிரசுரம்.
45. பிப்ரவரி 2015 -  'டுவிட்டூ'க்கள் 'நிகரன்' இதழில் பிரசுரம்.                         
46.  மார்ச் 2015 - 'பணிமாற்றம்' கவிதை ராணி இதழில் பிரசுரம். 
47. 1 ஏப்ரல் 2015 - மெப்கோ கல்லூரியில் EEE Association Valedictory function-இல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிற்றுரை நிகழ்த்தினேன்.
48. ஏப்ரல் 2015 - 'நம்பிக்கைதானே எல்லாம்' கவிதை 'நிகரன்' இதழில் பிரசுரம்.                  
49. மே 2015 - 'நடைவண்டி ஒன்று நாடகமாடுகிறது' கவிதை 'புதுப்புணல்' இதழில் பிரசுரம்.     
50. மே 2015 - 'பைத்தியமும் நாயும்' கவிதை 'நிகரன்' இதழில் பிரசுரம்.
51. ஜூன 2015 - 'பைத்தியமும் நாயும்' கவிதை 'திணை' இதழில் பிரசுரம்.
52. ஆகஸ்ட் 2015 - 'களவானிப்பய' சிறுகதை 'பயணம்' இதழில் பிரசுரம்.
53. 6 ஆகஸ்ட் 2015 - எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரியின் பயிலரங்கில் 'பாலின பாகுபாடு' குறித்த சிற்றுரை நிகழ்த்தினேன்.
54. ஆகஸ்ட் 2015 - 'டுவிட்டூ'க்கள் 'நிகரன்' இதழில் பிரசுரம். (உடன் என் மகள் இலக்கியாவின் முதல் கவிதையும் பிரசுரமானது).
55. அக்டோபர் 2015 - 'சரித்திர தேர்ச்சி கொள' கவிதை 'பயணம்' இதழில் பிரசுரம்.
56. அக்டோபர் 2015 - குறுங்கவிதை 'நீலநிலா' இதழில் பிரசுரம்.
57. 28 நவம்பர் 2015, சென்னை வளசரவாக்கதில் உள்ள தமிழ்த் திரைப்பாக்கூடத்தில் எனது நூல்கள், 'எட்டுக்காலியும் இருகாலியும்' மற்றும் 'டுவிட்டூ' த.க.இ.பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் தோழர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமையில், சென்னை மாவட்டத் தலைவர் தோழ்ர் மணிமுடி முன்னிலையில் வெளியீடு.
58. 10 ஜனவரி 2016, குஜராத் அகமதாபாத் நகரில், திருமதி நேஹா தலைமையில் POETRUSIC அமைப்பில் உருது,சமஸ்கிருத, ஹிந்தி, ஆங்கில கவிதைகள் குறித்தக் கலந்துரையாடலில் பங்கேற்று தமிழ் கவிதைகள் குறித்து முன்வைத்தல்.                                 59.  17 ஜனவரி 2016, ஹைதராபாத்தில் 'நிறை' மற்றும் 'உரத்த சிந்தனை' இலக்கிய வாசகர் வட்டம், கோ.முத்துசுவாமி அவர்கள் தலைமையில் நடத்திய படைப்பரங்கில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றல்.
60.  24 ஜனவரி 2016 - சென்னையில் 25 ஆவது வெள்ளி விழா மருத்துவ மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் எனது 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசும், ரூ.2000/- ரொக்கமும் பெற்றது.



உறுதிமொழி
மேற்கண்ட அனைத்து விபரங்களும் உண்மையானவையே என்பதை இதன்முலம் நான் உறுதியளிக்கிறேன்.
                                                                                     நன்றி.            

என்றும் தோழமையுடன்,
       
                                                                                                             பாண்டூ,
சிவகாசி.